மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!
50 லட்சமா, 1 கோடியா..? - நீங்கள் நினைத்த தொகையை அடைய உதவும் கோல் கால்குலேட்டர்!
உங்களால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாயையோ அல்லது 1 கோடி ரூபாயையோ சேர்க்க முடியுமா?
இந்தக் கேள்வியைக் கேட்டால், பலரும் ‘’முடியாது’’ என்று அடித்துச் சொல்லிவிடுவார்கள்.
காரணம் என்ன என்று கேட்டால், ‘’இதெல்லாம் பெரிய தொகை. இந்த அளவுக்கான பணத்தை சேர்க்கும் அளவுக்கு எனக்கு சம்பளம் இல்லை’’ என்று சொல்வார்கள்.
இது சரியான சிந்தனையா எனில், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். பிறகு நாம் ஏன் இப்படி நினைக்கிறோம்? இதற்குப் பல காரணங்கள்.

அணுகுமுறை மாற்றம் வேண்டும்…
நம்மால் பெரிய அளவில் பணம் சேர்க்க முடியுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கவே செய்கிறது. அதிகமான பணத்தை சேர்க்க வேண்டும் எனில், நம்மிடம் அதிகமான பணம் இருக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் பலரது மனதிலும் இருக்கிறது.
இந்த எண்ணம் சரியானதல்ல. நிறைய பணம் சேர்ப்பதற்கு நிறைய பணம் தேவை இல்லை. ஓரளவுக்குப் பணம் இருந்தாலே போதும். நாம் சேர்க்கும் பணம் கொஞ்சமாக இருந்தாலும் எந்த வகையான முதலீட்டில் நாம் பணத்தை முதலீடு செய்கிறோம். அந்த முதலீடு எந்த அளவு லாபம் தந்துகொண்டிருக்கிறது. அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க் என்ன என்பதைப் புரிந்து முதலீடு செய்தால், யாராலும் அதிகமான பணத்தை சேர்க்க முடியும்.

வருமானம் இல்லை என்கிற கவலை வேண்டாம்…
நிறைய பணம் சேர்க்கிற அளவுக்கு எனக்கு மாத வருமானம் இல்லை. என் சம்பளம் வெறும் 40,000 ரூபாய் என்று சொல்கிறவர்களும் இருக்கவே இருக்கிறார்கள். ஆனால், 10 அல்லது 20 ஆண்டுகளில் நீங்கள் மாதந்தோறும் எவ்வளவு பணத்தை சேர்த்தால், நீங்கள் சேர்க்க நினைக்கும் பணத்தை உங்களால் சேர்க்க முடியும் என்பதை துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும்.

நினைத்த தொகையை அடைய உதவும் கோல் கால்குலேட்டர்!
அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு பணத்தை சேர்க்க நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், நீங்கள் சேர்க்க நினைக்கும் பணத்தை உங்களால் நிச்சயமாக சேர்க்க முடியும். இதற்கு உங்களுக்கு உதவக்கூடிய மிக முக்கியமான கருவியாக இருக்கிறது கோல் கால்குலேட்டர்.
இந்த கோல் கால்குலேட்டர் உங்களுக்குத் தேவை எனில், உங்கள் விவரங்களைத் தந்து இந்த பார்மைப் பூர்த்தி செய்யுங்கள்: https://forms.gle/M9sko6kixxBnEM6bA
அடுத்த 48 மணி நேரத்துக்கு மட்டுமே இந்த லிங்க் செயல்படும். எனவே, அருமையான இந்த வாய்ப்பைத் தவறவே விடாதீர்கள்!
- ஏ.ஆர்.குமார்