செய்திகள் :

500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கைது!

post image

புணேவில், மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் 22 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை. பெண் மீது எந்த ரசாயன ஸ்பிரேவும் அடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில், அந்தப் பகுதியில் செல்போன் சிக்னலை வைத்து, 27 வயது ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில், குற்றவாளி செல்ஃபி எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த புகைப்படமும் பெண் நினைவோடு இருந்தபோதுதான் எடுக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

சம்பவத்தன்று, அப்பெண், தனது ஆண் நண்பரை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். தான் மனக்கவலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்படி, கைது செய்யப்பட்ட ஆண் நண்பரும் வந்திருக்கிறார். பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சிசிடிவி இருக்கும் என்பதால் மின்தூக்கி வழியாகச் செல்ல வேண்டாம், படிகட்டு வழியாக வெளியேறுமாறு அப்பெண் அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படியே அந்த நபரும் செய்திருக்கிறார்.

ஆனால், அதற்குள் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. திடீரென அடையாளம் தெரியாத நபர் மீது, அப்பெண் பாலியல் புகாரை சாட்டியிருக்கிறார். விசாரணை முடிவடையாததால், காவல்துறையினர் இது குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

இன்னும், அப்பெண்ணின் மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை. எனவே, பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர்தான் அந்த ஆண் நண்பர், பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்தான் அவரை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துள்ளார். கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கும் அப்பெண்ணை நன்கு தெரிந்திருக்கிறது.

சம்பவம் நடந்த நேரத்தில், அந்த குடியிருப்புக்கு அருகே பதிவாகியிருந்த 500 செல்போன் எண்களையும் ஆய்வு செய்தபிறகே, இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு, வெள்ளிக்கிழமை இரவு அவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பெண்தான் தன்னை அழைத்ததாகவும், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவரே தன்னடய செல்ஃபோனில் செல்ஃபி எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம்... மேலும் பார்க்க

அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை: துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் யாத்திரைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமை என்று மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தொடங்கி ஆகஸ்... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியா... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி ... மேலும் பார்க்க

’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?

தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிந்துகொ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வ... மேலும் பார்க்க