செய்திகள் :

"60 லட்சம் பேர் காத்திருக்கும்போது, 10,000 பேருக்கு மட்டும் அரசு வேலை" - திமுகவிற்கு ராமதாஸ் கண்டனம்

post image
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு கோரி சுமார் 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு 10,701 பேருக்கு மட்டும் தமிழக அரசு வேலை வழங்குவதாகக் குற்றஞ்சாட்டி பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு கோரி சுமார் 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்குப் பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் கடந்த ஆண்டில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு 10,701 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிரச் சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக 3,339 பேருக்கும், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் வாயிலாக 946 பேருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாகவே 2024ஆம் ஆண்டில் 15 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.

ஸ்டாலின்

அரசுத் துறைகளில் ஓராண்டில் 15 ஆயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்கப்படுவது எந்த வகையிலும் போதுமானதல்ல. இதிலும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், 2024ஆம் ஆண்டில்தான் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இதைவிடக் குறைந்த அளவில்தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை எந்த வகையிலும் போதுமானவை அல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குப் பிந்தைய மூன்றாண்டுகளில் வழங்கப்பட்ட பணிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 40,000 என்ற அளவை எட்டக்கூடும். இதுதவிர 33,655 பேருக்குத் தற்காலிக அரசு வேலை வழங்கப் பட்டுள்ளன. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்களின் தேவைகளை இவை நிறைவேற்றாது.

காவலர்கள்

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காளியாகக் கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுப் பணிகளிலிருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக ஆண்டுக்கு 1.40 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தே 40 ஆயிரம் பேருக்குத்தான் அரசு வேலைகளைத் திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத அளவுக்குப் பெரும் துரோகத்தைத் தமிழக அரசு செய்திருக்கிறது.

2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாயிலாக 10,375 ஆசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு ஆசிரியர் கூட நடப்பாண்டில் நியமிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் அரசுப் பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து பணிகளும் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 6 மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

ராமதாஸ்

அதேபோல், இடைநிலை ஆசிரியர் பணிக்கு ௨வ்768 பேரைத் தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டும் அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைத் தேர்வு செய்வதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் மற்றும் துரோகம் காரணமாகத் தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 60 லட்சத்திற்கும் கூடுதலான இளைஞர்கள் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வளவு பணியிடங்களைக் காலியாக வைத்திருப்பது பெரும் சமூக அநீதி ஆகும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

TN Assembly: "கடந்த ஆண்டே தெளிவுபடுத்தி இருக்கிறோம்" - ஆளுநர் வெளியேறியது குறித்து துரைமுருகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ரவி இன... மேலும் பார்க்க

TN Assembly : `வெளியேற்றப்பட்ட அதிமுக; வெளியேறிய காங்கிரஸ்...' சட்டசபையில் நடந்தது என்ன?

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வந்த வேகத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.இன்று ஆளுநர், சட்டமன்றத்துக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் ... மேலும் பார்க்க

`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ - ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவும் நீக்கமும்

2025 -ன் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்பதை கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையைவிட்டு வெளியேறினார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட... மேலும் பார்க்க

TN Assembly : 2025-ன் முதல் சட்டப்பேரவை கூட்டம்... பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ஆளுநர் உரை! | Live

இன்று ஆளுநர் உரை..!2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்க... மேலும் பார்க்க

`திமுக வெளிச்சத்தில் நாங்கள் இருக்கிறோமா?’ - முரசொலியை சாடும் மா.கம்யூனிஸ்ட் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3-ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்... மேலும் பார்க்க

`விஜய்க்கு கிறிஸ்தவ ஓட்டுகள் போய்விடக் கூடாது என்பதால்...' - உதயநிதியைச் சாடும் ஹெச் ராஜா!

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.அர்ஜூன் சம்பத்துடன்... மேலும் பார்க்க