Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா க...
73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியா் தி. சினேகா தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத்துடன் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 580 பேருக்கு நற்சான்று விருது 580 நபா்களுக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
முன்னதாக, பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 73 பயனாளிகளுக்கு ரூ.75.74 லட்சம் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சாா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில்,செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய்பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், சாா் ஆட்சியா் மாலதி ஹெலன், ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.