செய்திகள் :

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

post image

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பிலிருந்து விலகி அடுத்து இருப்பவர்களுக்கு வழிவிட வேண்டும் எனப் பொருள். மறைந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான மோரோபந்த் பிங்கிளே, 75 வயதை அடைவது என்பது மனதார ஒதுங்கிச் செல்வதற்கான சமிக்ஞை எனக் கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

75 வயதை எட்டிய பிறகு நீங்கள் கௌரவிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வயதாகிவிட்டது எனவே மற்றவர்களை உள்ளே விடுங்கள் எனச் சொல்லாமல் சொல்வதாகும்" என்றார்.

மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடி இருவரும் செப்டம்பர் 1950-ல் பிறந்தவர்கள். அதன்படி இந்த செப்டம்பர் மாதம் இருவருக்கும் 75 வயது. எனவே, மோகன் பகவத்தின் பேச்சு பிரதமர் மோடியை சுட்டுவதாக கூறப்படுகிறது.

இந்த விவாதத்தை கையில் எடுத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏழை விருது பெற்ற பிரதமருக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் நினைவூட்டியிருக்கிறார். பிரதமர் மோடியும் அதையே ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கூறலாம். ஏனென்றால் அவருக்கும் செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, ``பிரதமர் மோடியும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டுஅலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வழிகாட்டிக்கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மோகன் பகவத் - மோடி | RSS - BJP

சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத், ``எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்கள் 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெறுமாறு பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். அதே விதியை அவர் இப்போது தனக்கும் பயன்படுத்துகிறாரா என்று பார்ப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 2023-ல்,``பா.ஜ.க-வின் அரசியல் விதியில் ஓய்வு விதி என எதுவும் இல்லை. எனவே, பிரதமர் மோடி 2029 வரை தொடர்ந்து நாட்டை வழிநடத்துவார்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா பேட்டி

'அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என்று எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி கொடுத்ததற்கு பின்னணி அமித் ஷாவின் ஒரு பேட்டி தான்.மத்திய உள்துறை அமைச்சரி அமித் ஷா 'தி நியூ இந்தியன்... மேலும் பார்க்க

"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" - கேரளாவில் அமித் ஷா

கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்... மேலும் பார்க்க

லாக்கப் டெத் - குடும்பங்களை சந்திக்கும் விஜய்! - ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டம்?

'லாக்கப் மரணங்கள்!'கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்.விஜய்சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்து... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க