இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
75 வயதில் ஓய்வுபெற வேண்டும்! பிரதமர் மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் சூசகம்?
அரசியலில் இருப்பவர்களுக்கு 75 வயதானால், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலத்தின் புணே மாவட்டத்தில், புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உங்களுக்கு 75 வயது ஆகப்போகிறது என்றால், மற்றவர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டிய நேரம் இது என்று அர்த்தம் என்று தெரிவித்தார்.
மோகன் பகவத்துக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயதாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதே மாதத்தில்தான் 75 வயதைத் தொடவுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை குறிப்பிட்டுத்தான் மோகன் பகவத்தின் கருத்து தெரிவிக்கிறாரா? என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஊடகங்களில் இணையவாசிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோகன் பகவத்தின் கூற்றைக் குறிப்பிட்டுப் பேசிய சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், ``எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் முதலான தலைவர்களுக்கு 75 வயதானபோது, அவர்களை ஓய்வுபெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். ஆனால், அதே விதியை தனக்கும் பிரதமர் மோடி பயன்படுத்துகிறாரா என்பதைப் பார்ப்போம்" என்று கூறினார்.
இருப்பினும், பாஜகவின் சின்னமாகவும் மிகவும் பிரபலமான தலைவராகவும் பிரதமர் மோடி இருப்பதால், அவரின் ஓய்வு என்பது கணிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
பாஜகவில் 75 வயதான ஒருவருக்கு ஓய்வு அளித்துவரும் வழக்கம் கொண்டிருந்தாலும், 2019-ல் கர்நாடக முதல்வராகப் பதவியேற்றபோது பி.எஸ். எடியூரப்பாவின் வயது 76.
இதையும் படிக்க:கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு ஏன்? ஐ.நா. நிருபர் கேள்வி!