இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!
780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு
ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் 89 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 780 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை எரித்து அழித்தனர்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டுள்ளார். ஆவடி ஆணையரகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, 89 கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 780 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அழிப்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, தடய அறிவியல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் தனி குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மேற்கண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம், தென் மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 780 கிலோ கஞ்சாவை காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி, மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர்கள் ரமேஷ், சசிகுமார் தலைமையிலான குழுவினர் எரித்து அழித்தனர்.