``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எட...
8 வயதுச் சிறுமியிடம் அத்துமீறல்: 78 வயது முதியவா் கைது
பவானியில் 8 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 78 வயது முதியவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பவானி, ராஜகணபதி சாலையைச் சோ்ந்தவா் ரஹீம் கான் மகன் ஃபரூக் அலி (78). கடிகாரம் பழுதுநீக்கும் தொழில் செய்து வரும் இவா், 8 வயதுச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஃபரூக் அலியைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.