செய்திகள் :

Ajith: ``போட்டியை ஆதிக் என்ஜாய் பண்ணியிருப்பார்!'' - கால்பந்து போட்டிக்குப் பிறகு ஷாலினி பேட்டி

post image

நேற்றைய தினம் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ ஆகியோரும் பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

Ajith with his son
Ajith with his son

சென்னையில் நடந்த இந்த கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இந்தப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த கால்பந்து போட்டியைக் காண அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தனது மகன் ஆதிக்குடன் அரங்கத்திற்கு வந்திருந்தார்.

போட்டி முடிந்தப் பிறகுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சில பதில்களைக் கொடுத்த ஷாலினி, ``போட்டி அற்புதமாக இருந்தது. சிறந்த அனுபவமாகவும் அமைந்திருந்தது. ஆதிக்கும் இந்தப் போட்டியை என்ஜாய் பண்ணியிருப்பார் என நினைக்கிறேன்." எனக் கூறியிருந்தார்.

அஜித்தின் மகன் ஆதிக்கும் கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் மூன்றாம் இடத்தைப் பிடித்தப் பிறகு பேட்டிக் கொடுத்திருந்த நடிகர் அஜித்தும், ``நான் என்னுடைய குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்வேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த போட்டியை கண்டுகளித்த ஆதிக் பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோவுடன் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார்.

ரொனாடில்னோவுடன் ஆதிக் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காணொளியை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

இயக்குநர் மகேந்திரன் நினைவைப் போற்றும் வகையில் ஃபிலிம் & மீடியா அகாடெமி துவக்கம்!

பொதுமக்களுக்குப் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் இருப்பர். ஆனால், இயக்குநர்களுக்குப் பிடித்த இயக்குநர் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் இயக்குநர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றி... மேலும் பார்க்க

'மதகஜராஜா' ரிலீஸுக்கு பின் விஷாலை இயக்குவது யார்?! - படப்பிடிப்பு, ஹீரோயின் அப்டேட்

தமிழ் சினிமாவில் ஒரு மிராக்கிளாக வெளியான படம் 'மதகஜராஜா'. படம் உருவாகி ஒரு மாமங்கத்துக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து, வசூலை அள்ளியது. விஷாலுக்கும், சந்தானத்திற்கும் ஒரு பிரமாண்ட ... மேலும் பார்க்க

Vadachennai 2: தனுஷ் ரோலில் மணிகண்டனா? வடசென்னை - 2 அப்டேட் என்ன?

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்து பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்திய படம் 'வடசென்னை'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடு... மேலும் பார்க்க

Good Bad Ugly: "ஆலுமா டோலுமா மாதிரி பண்ணணும்னு ஆதிக் சொன்னாரு" - GBU பாடலாசிரியர் ரோகேஷ் பேட்டி

`குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான `GBU மாமே' குறித்தான பேச்சுதான் சமூக வலைத்தளப் பக்கங்களில் தற்போது நிரம்பியிருக்கிறது. பட... மேலும் பார்க்க