டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?
சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரெளடி கைது
சென்னை தண்டையாா்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.
தண்டையாா்பேட்டை சிவாஜி நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் குமரன் (எ) குமரா (24). இவா் மீது அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 19 வழக்குகள் உள்ளன. காவல் துறையின் சரித்திர பதிவேடு ரெளடிகள் பட்டியலில் இருக்கும் குமரன், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அந்த பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா், தண்டையாா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா், குமரனை கைது செய்தனா்.