செய்திகள் :

Anirudh: "அந்த 8 பேருக்கு பிடிக்கலைன்னா டியூனை மாத்திடுவேன்" - அனிருத்

post image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரமாண்டமாக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சில பேட்டிகளை அளித்திருந்தார்.

Lokesh Kanagaraj - Rajini - Coolie
Lokesh Kanagaraj - Rajini - Coolie

இதனைத் தொடர்ந்து அனிருத்தும் சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கத் தொடங்கிவிட்டார். அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது அன்றாட வாழ்க்கை குறித்தும், தனது ஸ்டூடியோ நண்பர்கள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், "தினமும் மதிய நேரத்தில் நான் விழித்துக் கொள்வேன். எழுந்து அப்பா, அம்மாவுடன் 20 நிமிடங்கள் செலவழித்துவிட்டுதான் ஸ்டூடியோவுக்குச் செல்வேன்.

ஸ்டூடியோவில் என்னுடைய குழுவினர் மொத்தமாக 8 நபர்கள் இருக்கிறார்கள். டிரம்ஸ் வாசிப்பவர், வயலின் வாசிப்பவர், சவுண்ட் இன்ஜினீயர் என மொத்தமாக 8 நபர்கள் இருக்கிறோம்.

என்னுடைய பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்த அதே குழுதான் இப்போதும் என்னிடம் இருக்கிறார்கள். எங்களுக்கு வேலையைச் செய்வதுபோன்ற ஃபீலே இருக்காது.

Anirudh
Anirudh

ஜாலியாக நண்பர்களுடன் சேர்ந்து மியூசிக் செய்வதுபோலதான் இருக்கும். அவர்கள் சொல்லும் பரிந்துரைகளையும் நான் எடுத்துக்கொள்வேன்.

குழுவிலிருக்கும் 8 நபர்களுக்கும் ஒரு பாடல் பிடிக்கவில்லையென்றால் அதை படத்தின் இயக்குநருக்கே அனுப்பமாட்டோம்.

எல்லோருக்குமே பிடித்தால்தான் அந்த டியூன் நடக்கும். இல்லையெனில், வேறு ஒரு டியூனில் வேலை செய்யத் தொடங்கிவிடுவோம். நண்பர்களாகிய நாங்கள் ஜாலியாகதான் அத்தனை வேலையையும் செய்வோம்." எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Parking: 'அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'- தேசிய விருதுகள் குறித்து ஹரிஷ் கல்யாண்

71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 'பார்க்கிங்' திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது. பார்க்கிங்இந்நிலையில் பார்க்கிங் ... மேலும் பார்க்க

"சிறந்த துணை நடிகர் விருதை வென்ற தம்பி எம்.எஸ். பாஸ்கர்..." - பாராட்டும் கமல்ஹாசன்

திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.இதில், சிறந்த தமிழ் படத்துக்கான விருது, சிறந்த திரைக்கான விருது (இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்), சிறந்த துணை நடிகர... மேலும் பார்க்க

'அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்'- எம்.எஸ். பாஸ்கரை வாழ்த்திய சாம்ஸ்

71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 'பார்க்கிங்' திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது.இந்நிலையில் சிறந்த துணை நடிகருக்கா... மேலும் பார்க்க

Shah rukh khan: "அட்லீ சார் மாஸ்" - தேசிய விருது வென்றவுடன் நன்றி தெரிவித்த ஷாருக் கான்

திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.இதில், சிறந்த நடிகருக்கான விருது `12th Fail' திரைப்படத்திற்காக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கும், ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்... மேலும் பார்க்க

Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி

71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பார்கிங் தேர்வு செய்யப்பட்டது.அத்துடன் இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்... மேலும் பார்க்க

71st National Film Awards Full List: சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, கலைஞர்கள்; முழு பட்டியல் இதோ!

71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிரு... மேலும் பார்க்க