செய்திகள் :

Aval Awards: சமூக சேவை, விவசாயம், விளையாட்டு, சினிமா... `சாதனை பெண்களின் சங்கமம்’ இன்று... அவள் விருதுகள் | Live

post image

`அவள் விகடன்' விருதுகள்!

தமிழின் நம்பர் ஒன் பெண்கள் இதழான அவள் விகடனுக்கு, இது 27-வது ஆண்டு. சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் அவள் விருதுகளை வழங்கி வருகிறது அவள் விகடன். அந்த வகையில், தற்போது ஏழாவது அவள் விருதுகள் விழா சிறப்புடன் நிகழவிருக்கிறது.

அவள் விகடன் விருதுகள்

ஒரு காலத்தில் அடுப்பங்கரையையும், வீட்டு வாசலையும் தாண்டவிடாமல் தடுத்துவைக்கப்பட்ட பெண்கள், பல்வேறு போராட்டங்களும், கல்வியறிவும் தந்த உரிமை மற்றும் சுதந்திரத்தால் இன்று பல துறைகளில் சாதனையாளர்களாகத் திகழ்கின்றனர். அவ்வாறு, சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக விருதுகள் வழங்கி வருகிறது அவள் விகடன். அந்த வரிசையில், ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கி பெருமைப்படுத்துகிறது அவள் விகடன். இந்த, `அவள் விருதுகள்' நிகழ்ச்சி, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஃபெதர்ஸ் ராதா ஹோட்டலில் இன்று (08-11-2024) பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர்களில் ஒருவரான உ.வாசுகி, நடிகை லட்சுமி, சிம்ரன், நிகிலா விமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், இன்னும் பல சாதனை பெண்களும் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.

அவள் விருதுகள்
அவள் விருதுகள்

விருது குறித்த முழு விவரங்களை தெரிந்துகொள்ள...

https://awards.vikatan.com/aval-awards/2024/

அவள் விருதுகள்: `மனிதத்தின்மீது நம்பிக்கை இழந்து இருந்தேன்; ஆனால்..!' - நெகிழ்ந்த முன்னாள் நீதிபதி

- ஓய்வுபெற்ற முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி இரா.தாரணி அவர்கள்"வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்" என்று இருந்த எனக்கு அவள் விகடன் விருதுகள் 2024 மிகப்பெரிய உந்துதலையும் உற்சாகத்தையு... மேலும் பார்க்க

அவள் விருதுகள்: உ.வாசுகி முதல் நிகிலா விமல் வரை-சென்னையில் நிகழவிருக்கும் சாதனைப் பெண்களின் சங்கமம்!

தமிழின் நம்பர் ஒன் பெண்கள் இதழான அவள் விகடனுக்கு, இது 27-வது ஆண்டு. சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெ... மேலும் பார்க்க