செய்திகள் :

Baakiyaalakshmi : `கதாபாத்திரத்தை புரிஞ்சுகோங்க பாஸ்'- மாஸ் காட்டிய இனியா; அதிர்ந்து போன குடும்பம்

post image

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் நெகடிவ்வாக சித்தரிக்கப்பட்டு வந்தது. டீன் ஏஜ் பெண்ணான இனியா அடிக்கடி ரிலேஷன்ஷிப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்வார். நண்பர்களுடன் பார்ட்டி சென்றபோதும் பிரச்னைகளில் சிக்கிக்கொண்டார். டீன் ஏஜ் பருவத்தில் பல காதல்கள் மலர்வதும், வீட்டிற்குத் தெரியாமல் நண்பர்களுடன் வெளியே செல்வதும் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் ஒன்றுதான். பெரும்பாலானோர் இதனை கடந்து வந்திருப்போம்.

ஆனால் இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்தே பல ரசிகர்கள் இனியா கதாபாத்திரத்தை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் இனியா-ஆகாஷ் காதல் காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது கூட இனியா எத்தனை பேரை தான் காதலிப்பார் என சில ரசிகர்கள் விமர்சிப்பதை பார்க்க முடிந்தது.

`அட்டகத்தி', `ஆட்டோகிராஃப்' போன்ற படங்களில் நாயகனின் டீன் ஏஜ் காதல்களை கொண்டாடிய ரசிகர்கள், பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு பெண்ணுக்கு வெவ்வேறு பருவத்தில் ஏற்படும் ஈர்ப்பை (Infatuation) விமர்சிப்பது முரண். சரியான நபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற வாதம் இருபாலருக்கும் பொதுவான ஒன்றே!

இதுபோன்ற விமர்சனங்கள் வரும் எனத் தெரிந்தும், இனியா என்னும் டீன் ஏஜ் பெண்ணின் கதாபாத்திரத்தை சித்தரித்ததுள்ளது பாராட்டுக்குரியது. வெவ்வேறு பருவத்தில் வெவ்வேறு நபர் மீது ஏற்படும் ஈர்ப்பு இயல்பானது தான். அந்தச் சூழலை எப்படி கையாள்கிறோம், வீட்டில் இருப்பவர்கள் எப்படி கையாள்கிறார்கள், என்பது மிகவும் முக்கியம்.

இனியா ஒவ்வொரு முறையும் பிரச்னைகளில் சிக்கும் போதெல்லாம் பாக்யா பக்குவமாக எடுத்துச் சொல்லி இனியாவை பக்குவப்படுத்துவது அருமை.

இனியா-ஆகாஷ் காதல் விவகாரம் தெரிந்ததும் ஈஸ்வரியும், கோபியும் இனியாவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர். நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாக்யா இதனைத் தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் தோல்வியில் முடிகிறது. ஆனால் இனியா துணிச்சலாக காவல்துறைக்கு தகவல் சொல்கிறார். தனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயக் கல்யாணம் நடப்பதாகப் புகாரளிக்கிறார்.

நிச்சயதார்த்தம் நடக்கும் வேளையில் போலீஸ் அங்கு வருகின்றனர். கோபியை கேள்வி கேட்கின்றனர். ஈஸ்வரி வழக்கம்போல் போலீஸுக்கு சொன்னது பாக்யா தான் என்று கடிந்து கொள்கிறார். இதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது. இனியாவின் நிச்சயம் நடந்தததா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

இனியா தைரியமாக போலிஸுக்கு போன் செய்து நிச்சயத்தை நிறுத்த முயற்சித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன..

1.பொதுவாக சீரியல்களில் நடக்கும் கட்டாயக் கல்யாணத்தை நிறுத்துவது என்பது கடினமாக செயலாகக் காட்டப்படுகிறது. உதாரணமாக ஒரு சீரியலில் நடக்கும் கட்டாயக் கல்யாணங்களை அந்த வீட்டுப் பெண்கள் போலீஸிடம் சொல்லாமல் அவர்களே கஷ்டப்பட்டு மாஸ் காட்டி நிறுத்த முயற்சி செய்வார்கள், ஆனாலும் கல்யாணம் நடந்து முடிந்தது. ஆனால் பாக்யலட்சுமி சீரியலில் கட்டாயக் கல்யாணத்தை நிறுத்துவது எவ்வலவு சுலபம் என்னும் யதார்த்தத்தை, எந்த மாஸ் காட்சிகளும் இன்றி காட்டிவிட்டனர்.

2. இனியா கதாபாத்திரம் நடன நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இனியாவின் ரோல் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Siragadikka aasai : மனோஜால் முத்துவுக்கு வந்த புதிய பிரச்னை - தீர்வு காண்பாரா பாட்டி?

சிறகடிக்க ஆசை சீரியலில் இயக்குநர் வைத்த அதிரடி காட்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டது. ரோகிணி மொத்தமாக மாட்டிக் கொண்டிருந்தால் ஸ்வாரஸ்யமாக இருந்திருக்காது. எனவே அவரின் மலேசியா பொய்கள் மட்டும் வெளிப்... மேலும் பார்க்க

'அம்மா, அப்பா இல்லைன்னா பிச்சை தான் எடுத்துட்டிருந்திருப்பேன்!' - `கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

`கனா காணும் காலங்கள்' தொடரின்மூலம் பரிச்சயமானவர் ராகவேந்திரன். இவர்தொடர்ந்து சில தொடர்களிலும் நடித்திருந்தார். மீடியாவைவிட்டு விலகப்போவதாக முன்பு இவர் அறிவித்திருந்தார். அந்த செய்தி வைரலாகப் பரவியது. ... மேலும் பார்க்க

Ayyanar Thunai: மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நிலா, சோழனின் காதல் கதை என்னவாகும்?

அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில் நிலா சோழனின் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சேரனின் நல்ல மனதிற்காக நிலா ரிசப்ஷனுக்கு சம்மதிக்கிறார். அதே சமயம் சேரனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். ... மேலும் பார்க்க

ஹூசைனி என்கிற வீரனை கடுமையான நோய் தாக்கி வீழ்த்தியிருக்கு - கலங்கும் குடும்ப நண்பர் ஜெயந்தி

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி உடல்நலக் குறைவால் இன்று (25.03.2025) காலமாகினார். அவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் A.L.S தயாரிப்பு ந... மேலும் பார்க்க

``பாகிஸ்தான் போயிட்டு வந்தேன்; சினிமா கம்பேக் இல்லை" - சொர்ணமால்யா| இப்ப என்ன பண்றாங்க பகுதி 2

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப... மேலும் பார்க்க