Kalolsavam: கேரள மாநில பள்ளிக் கலை விழா; பிரமாண்ட சமையல், கண்கவர் நிகழ்ச்சிகள்.....
Baakiyalakshmi : `கோபியின் அன்புக்கு போட்டாப் போட்டி; ஆனால் கோபி ஏங்குவது..?’
பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கோபி - பாக்யா - ராதிகா இவர்களுக்குள் இருந்த மனக்கசப்பு மாறி ஓரளவுக்கு புரிதல் ஏற்பட்டுள்ளது. ராதிகாவின் சூழலை பாக்யா புரிந்து கொண்டார். பாக்யா ஒருபோதும் விரோதமாக நடந்து கொள்ளமாட்டார் என்பதை ராதிகா புரிந்து கொண்டார்.
கோபி மட்டும் பாக்யாவை புரிந்து கொள்ள நேரமெடுத்தது. இப்போது அவரும் பாக்யாவை புரிந்து கொண்டார். ஆனால் பாக்யாவிற்கு கோபி மீதான கோபம் மாறவேயில்லை. அவரின் கோபம் நியாயம் என்பதையும் கோபி உணர்ந்துவிட்டார்.
கடந்த சில எபிசோடுகளாக கோபியின் அம்மாவுக்கும் ராதிகாவிற்குமான பிரச்னைகள் ஓடிக் கொண்டிருக்கிறது.
செழியன், ராதிகா வந்ததில் எந்த எதிர்ப்பையும் காட்டுவதில்லை. கோபி மன நிம்மதியுடன் இருந்தால் போதும் என கருதி அமைதி காக்கிறார். ஆனால் இனியாவும், கோபியின் அம்மா ஈஸ்வரியும் ராதிகாவை வெறுக்கின்றனர்.
நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி காலையில் கோபியை வற்புறுத்தி வாக்கிங் போக சொல்கிறார். கோபியும் அம்மாவின் வற்புறுத்தலால் போகலாம் என கிளம்புகிறார். ஆனால் அதற்குள் ராதிகா வந்து கூட்டி செல்கிறார். ஈஸ்வரிக்கு இது பிடிக்கவில்லை.
கூட்டு குடும்பத்தில் பொதுவாக கல்யாணம் ஆன சில வருடங்களுக்கும் மாமியார் மருமகள் பிரச்னைகள் இருக்கும். போக போக மாமியார் மருமகள் புரிதல் வந்துவிடும், இல்லையேல் தனிகுடித்தனம் செல்ல நேரிடும்.
ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு தாய் மகளாக பழக ஆரம்பித்துவிடுவார்கள். பாக்யா-ஈஸ்வரி இடையே இந்த புரிதல் வந்துவிட்டது. ஆனால் ராதிகாவை ஈஸ்வரிக்கும் பிடிக்கவேயில்லை. தேடி தேடி குறை சொல்கிறார். ராதிகாவும் சண்டை போட வேண்டாம் என்று அமைதியாக் விட்டுக் கொடுக்கிறார்.
ராதிகா கோபி வாக்கிங் சென்ற இடத்தில் கோபியால் நடக்க முடியவில்லை என அமர்ந்து கொள்கிறார். ராதிகா, பாக்யாவோடு சேர்ந்து வாக்கிங் செல்கிறார்.
``பாக்யா எங்க பார்த்தாலும் நீங்க தான் இருக்கீங்க, இப்ப தான் கிச்சன்ல உங்கள பார்த்தேன், அதற்குள்ள வாக்கிங் போறீங்க, எப்படி இவ்ளோ வேலைகளை ஒரே ஆளா பாக்குறீங்க” என்று ராதிகா பாக்யாவை பாராட்டுகிறார். ராதிகா தொடர்ந்து பாக்யாவின் உழைப்பை பார்த்து வியக்கிறார். ஆனால் பாக்யாவை கோபி பாராட்டினால் பொசசிவ் ஆகி விடுகிறார்.
நேற்றைய எபிசோடின் மற்றொரு முக்கிய சம்பவம் மையூவுக்கு கோபி கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை பார்த்து இனியா கடுப்பாகிறார். வேண்டுமென்றே கோபியிடம் சென்று பேசுகிறார். ஆனால் கோபி சின்சியராக மையூவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஈஸ்வரி கடுப்பாகி, அப்பா பொண்ணு பேசும் போது தொந்தரவு பண்ணாத என்று மையூவை கடிந்து கொள்கிறார். அதற்குள் ராதிகா வந்து மையூவை அழைத்து செல்கிறார்.
இனியாவுக்கு கோபி மீது பொசசிவ்னஸ், ராதிகாவிற்கும் கோபி மீது பொசசிவ் உணர்வு, ஈஸ்வரிக்கும் அதே தான். ஆக மொத்தம் கோபியின் அன்புக்கு போட்டாப் போட்டியே நடக்கிறது.
ஆனால் கோபி ஏங்குவது எல்லாம் பாக்யாவின் பாசத்திற்காக தான். பாக்யாவிடன் பேச பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்கிறார்.
தமிழ் சீரியல் வரலாற்றில் இந்த கதை கொஞ்சம் புதியது. 45+ நாயகி, நாயகனை அடிப்படையாக கொண்டு இப்படி ஒரு முக்கோண உறவைப் பற்றிய கதை இதுவரை வராத ஒன்று. நீ எதற்குமே லாயக்கில்லை என்று பாக்யாவை ஒதுக்கிய கோபி இப்போது அவரை `சூப்பர் வுமன்’ என்று பாராட்டுகிறார். இதுதான் பாக்யாவின் வெற்றி. இந்த சீரியலில் கதை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது. பழனி என்ற கதாபாத்திரம் ரிஎண்ட்ரி கொடுத்தால் கதைகளம் மாறலாம்!