செய்திகள் :

Bad Girl: "எத்தனையோ மோசமான படங்களுக்கு கை தட்டி, விசில் அடித்திருப்போம்; அதனால்" - மிஷ்கின்

post image

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'BAD GIRL'.

அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது.

`BAD GIRL' படம்
`BAD GIRL' படம்

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், "ஒரு கலைப்படைப்பு சமூகத்திலிருந்துதான் உருவாகிறது.

ஆனால் நம் சமூகம் கலைப்படைப்புகளைப் பார்த்து இதுதான் சமூகத்தைக் கெடுகிறது என்கிறார்கள்.

அந்தவகையில் ஒரு மோசமான கலைப்படைப்பு சமூகத்தைக் கெடுகிறது. ஒரு நல்ல கலைப்படைப்பு சமூகத்தைச் சிந்திக்க வைக்கிறது.

சில சித்தாந்தங்களை சினிமா எதிர்த்துக் கேள்விகேட்கும் போது நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் நியாயமானதும்தான்.

எத்தனையோ கோடிகளை ஒழுக்கம் இல்லாத படைப்புகளுக்குக் கொட்டி இருக்கிறோம்.

எத்தனையோ மோசமான படங்களுக்கு கை தட்டி விசில் அடித்திருப்போம். அதனால் கொஞ்சம் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த விமர்சனம் கூர்மையான ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் அந்த விமர்சனம் கழுத்தைத் துண்டிக்கும் வகையில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒரு கலைஞனின் கழுத்தைத் துண்டிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

இந்தப் படத்தைப் பற்றி நிறைய விமர்சனங்கள். சென்சாரில் நிறையப் போராட்டம்.

மிஷ்கின்
மிஷ்கின்

ஒரு படம் 50 சதவிகிதம் பிடிக்கும். 50 சதவிகிதம் பிடிக்காது. இதுதான் ஒரு திரைப்படம் செய்ய வேண்டிய வேலை.

ஒரு படம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டால், அந்தப் படத்தில் உண்மை இல்லை என்று அர்த்தம்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு என்னிடம் பணிபுரியும் ஆசிஸ்டன்ட் டைரக்டர்கள் விவாதத்தை நடத்தினார்கள்.

அவர்கள் எல்லோரும் மாறி மாறி கருத்துக்களை முன்வைத்தார்கள். அப்போது அந்த இடத்தில் ஒரு பெண் ஆசிஸ்டன்ட் டைரக்டர் இருந்தார். அவரிடம் கேட்டோம் படம் எப்படி இருக்கிறது என்று.

அந்தப் பெண் இந்தப் படம் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அதுதான் இந்தப் படத்திற்கான வெற்றி" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங்க" - KPY பாலா

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ... மேலும் பார்க்க

KPY Bala: "படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன்" - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது என... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய பட பூஜை க்ளிக்ஸ்! | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

குமார சம்பவம்: "நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என அப்பா சொன்னார்" - ஹீரோவாக அறிமுகமாகும் குமரன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் குமரன் தங்கராஜன். தற்போது ‘குமார சம்பவம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரம்: "மனிதர்களுக்குச் செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால்" - மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் வேலூரில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், 'சினிமா துறையிலிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே இதை எப்படிப் ... மேலும் பார்க்க