முதுநிலை மருத்துவ படிப்புகளை தொடங்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு
BB Tamil 8: 'அப்பா ஏம்மா வரல...' - கலங்கிய விஜே விஷால்; சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நாமினேட் ஆகியிருந்த போட்டியாளர்களிலிருந்து ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள்.
அந்த வகையில் இன்று வெளியான முதல் இரண்டு புரோமோக்களில் தீபக் மற்றும் மஞ்சரியின் குடும்பங்கள் வந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது விஜே விஷாலின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். 'அப்பா ஏம்மா வரல என்று விஜே விஷால் கேட்க, நீ ஏன் அப்பாகிட்ட பேசாம இருந்த புள்ள பேசலங்கிற கஷ்டம் அதான் அப்பா வரல' என்றார்.
அதனைக் கேட்டு விஜே விஷால் அழுதுகொண்டிருக்கும்போது அவரின் அப்பா சர்ப்பரைஸ் ஆக என்ட்ரி கொடுக்கிறார். உன்கிட்டதான் சண்டை போடா முடியும். எனக்கு வேற பையன் யாரும் இல்ல. எனக்கு இவன் கிட்டதான் சண்டை போட முடியும்.
நான் நிறைய கஷ்டங்களை அவனுக்குக் கொடுத்துட்டேன். அது தப்புதான். இங்க வச்சுக்கூட அவன்கிட்ட ஸாரி கேட்டுகுறேன்" என்கிறார்.