BB Tamil 8: `மூணு வாரம் நல்லா விளையாடிட்டு டைட்டில் வின்னரா நீ வா...' - ஜாக்குலினை தேற்றிய அம்மா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 26) வெளியாகி இருக்கும் நான்காவது ப்ரோமோவில் ஜாக்குலின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். 'உங்களை நான் கஷ்டப்பட வச்சுட்டனா?'என்று அழுதுக்கொண்டே அம்மாவிடம் ஜாக்குலின் கேட்கிறார். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை' என்று அவர்கள் சொல்ல '12 வாரம் நான் மட்டும்தான் நாமினேஷனில் இருக்குறேன்' என்றார் ஜாக்குலின்.
முதல் வாரமும், இரண்டாவது வாரமும் எப்படி விளையாடினயோ அதேப்போல விளையாடு. அவள் மேல எதாச்சும் தப்பு இருந்தால் சொல்லிருங்க, அவள் இப்படி அழுது நான் பார்த்தது இல்ல. இங்க வந்துதான் இப்படி அழுகுறாள்.
மூணு வாரம் நல்லா விளையாடிட்டு டைட்டில் வின்னரா நீ வா நான் எதிர்பார்த்திட்டு இருப்பேன்' என்று அவரது அம்மா ஜாக்குலினை தேற்றுகிறார்.