BB Tamil 8: 'நான் இந்த கேம்ல இருக்கணும்னா அருண் வெளிய போகணும்' - முத்துகுமரன் | டிக்கெட் டு ஃபினாலே
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 86 வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் ஜெப்ஃரியும், அன்ஷிதாவும் வெளியேறி மீதம் 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனிற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதனிடையே இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கு தொடங்கி இருக்கிறது. முத்துகுமரன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுகிறார். 'நான் இந்த கேம்மில் இருந்து வெளியேறாமல் இருக்க அருண் வேண்டும் என்பதால் அருணை இந்த கேம்மைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்' என கேம்மில் அருணின் புகைப்படத்தை எரிக்கிறார் முத்துகுமரன். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் ஆட்டம் சூடுப்பிடித்திருக்கிறது.