செய்திகள் :

BGT: `இந்தியாவுக்கு 46 வருஷம், ஆஸி.க்கு 9 வருஷம்' -சிட்னியில் யாருடைய காத்திருப்பு முடிவுக்கு வரும்?

post image
சிட்னி மைதானத்தில் நாளை தொடங்கும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டி, தொடரை கைப்பற்றப்போவது யார், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்லுமா, இந்தியாவின் 46 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா அல்லது ஆஸ்திரேலியாவின் 9 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா என்பதற்கு விடையாக இருக்கப்போகிறது.

முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படும் இந்தத் தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் 2 - 1 என ஆஸ்திரேலியா முன்னிலையில். பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய இந்திய அணி, 2-வது போட்டியில் தோல்வியடைந்து, 3-வது போட்டியை டிரா செய்து, கடைசியாக மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே போட்டியில் மீண்டும் தோல்வி நிலைக்குத் திரும்பியது.

ஆஸ்திரேலியா

2024-ம் ஆண்டை தோல்வியுடன் நிறைவுசெய்த இந்திய அணி, 2025-ல் முதல் போட்டியாக சிட்னியில் நாளை தொடங்கும் போட்டியை வென்று, 46 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்து இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க மும்முரமாக இருக்கிறது. அதேசமயம், ஆஸ்திரேலியாவும் இந்தப் போட்டியை வென்று அல்லது டிரா செய்து தனது 9 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறது.

சிட்னியில் நாளைய போட்டியை வெல்வது இந்திய அணிக்கு சிட்னியில் 46 வருட காத்திருப்பையும் முடிவுக்கு கொண்டுவரும் வாய்ப்பையும் அளிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில், 1948-ம் முதல் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடைசியாக 2021-ல் இரு அணிகளுக்கும் இங்கு ஆடியது வரை மொத்தமாக 13 டெஸ்ட் போட்டிகள் இங்கு நடைபெற்றிருக்கிறது. இதில், அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறை வென்றிருக்கிறது.

சிட்னி - ப்ரெட் லீ, சச்சின்

7 போட்டிகள் சமனில் முடிந்திருக்கின்றன. இந்தியா ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது. அதுவும், 1978-ல் நடைபெற்ற போட்டியில். அந்தப் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அதற்குப் இங்கு மைதானத்தில் வெற்றி பெறவேயில்லை. இந்த மைதானத்தில் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் 9 இன்னிங்ஸ்களில் 785 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல், அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள் பட்டியலில் 5 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தியா

மேலும், இந்த மைதானத்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 2004-ல் 7 விக்கெட் இழப்புக்கு 705 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் சச்சின் 248 ரன்களும், விவிஎஸ் லக்ஷ்மன் 178 ரன்களும் அடித்தனர். எனவே, நாளைய போட்டியில் இந்தியா வெற்றிபெற்று 46 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், இதில் வெற்றி பெறுவதன் மூலம் பார்டர் கவாஸ்கர் டிராபியையும் இந்தியா தக்கவைக்கலாம்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே நோக்கம் சிட்னி டெஸ்டில் வெற்றிபெறுவதைத் தாண்டி தோற்கக் கூடாது என்பது மட்டுமே. 1996-97 முதல் நடத்தப்பட்டு வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில், இதுவரையில் 16 தொடர்கள் நடைபெற்றிருக்கிறது. இதில், ஒரேயொரு தொடர் மட்டுமே சமனில் முடிந்திருக்கிறது. மற்றபடி, 10 தொடர்களை இந்தியா வென்றிருக்கிறது. அதில், 8 முறை சொந்த மண்ணில் இந்தியா வென்றிருக்கிறது.

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்

அதேபோல், ஆஸ்திரேலிய அணி இந்தியா வென்றதில் பாதியளவு அதாவது 5 தொடர்களை மட்டுமே வென்றிருக்கிறது. அதில், 4 முறை சொந்த மண்ணிலும், ஒரேயொரு முறை (2003-04) இந்தியாவிலும் வென்றிருக்கிறது. கடைசியாக, 2016-17ல் சொந்த மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா, கடந்த நான்கு தொடர்களிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தொடர்களை இழந்து வருகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா சொந்தமாக்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.

சிட்னி டெஸ்டுக்கு தயாரான ஆஸ்திரேலிய அணி

இப்போது, அந்த 9 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு, நாளை தொடங்கும் போட்டியில் வெற்றி பெறவில்லையென்றாலும், தோற்காமல் டிரா செய்தாலே கோப்பையை ஆஸ்திரேலியா தனதாக்கிக் கொள்ளலாம். மேலும், வெற்றிபெற்றால் ஐ.சி.சி (ICC) டெஸ்ட் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுவதையும் ஆஸ்திரேலியா உறுதிசெய்யலாம். எனவே, சிட்னி டெஸ்ட் இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிட்னி டெஸ்டில் யார் வெல்வார்கள் என்பது குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடவும்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Aus vs Ind: "இதே பயிற்சியாளர்கள் தொடர வேண்டுமா?" - கம்பீர் குழு நோக்கி கவாஸ்கர் அடுக்கும் கேள்விகள்

கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, ஜூன் மாதம் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பற்ற பிறகு இந்திய அண... மேலும் பார்க்க

Karun Nair 2.0: `5 மேட்ச், 4 சதம், 542 ரன்கள்.. உலக சாதனை' - இந்திய அணியின் கதவை தட்டும் கருண் நாயர்

2016 டிசம்பரில் இந்தியா - இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில், சென்னையில் நடைபெற்ற 5-வது போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக முச்சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருண் நாயர். அந்த டெஸ... மேலும் பார்க்க

Virat Kohli: `பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கோலியின் கடைசி தொடரா..' - ஆஸி கேப்டன் கம்மின்ஸ் கூறியதென்ன?

சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் 2024-25 முடிவுக்கு வந்திருக்கிறது. சிட்னி டெஸ்டில் வென்றதன் மூலம் 3 - 1 என தொடரைக் கைப்பற்றிய ... மேலும் பார்க்க

Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்விக்குப் பின் கம்பீர்

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது 9 ஆண்டுகளாகத் தன்வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவில் இழந்திருக்கிறது.முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

Virat Kohli : ``இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை"- கோலியை கடுமையாகச் சாடும் இர்பான் பதான்

பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியை வென்ற போதும் இந்திய அணி தொடரை இழந்ததற்கு சீனியர் வீரர்களே மிக முக்கிய காரணம். இந்நிலையில், 'இந்திய அணிக்கு சூப்பர... மேலும் பார்க்க

AUSvIND: `பரிசளிப்பு விழாவுக்கு அழைப்பில்லை; ஆஸியில் அவமதிக்கப்பட்டாரா கவாஸ்கர்?' - பின்னணி என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னி டெஸ்ட்டை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிக்கோப்பையை வழங்கும் நிகழ்வில் இந்தியா... மேலும் பார்க்க