Bigg Boss 8 Grand Finale: ``நான் வெளியேறக் காரணம் இதுதான்... " - பவித்ரா
கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.
அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் எனக் கலகலப்பாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இணைந்தனர். மொத்தமாக 24 பேரில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்ஷனில் ஜாக்குலின் வெளியேற, பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.
எவிக்ஷனுக்குப் பிறகு பேசியிருக்கும் பவித்ரா, "இந்த பிக்பாஸ் பயணத்தில் என்னை நானே புரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப பொறுமையாக இருந்ததுதான் நான் வெளியே வந்ததற்குக் காரணம். இந்த நினைவுகளை என்னைக்குமே மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் அனுபவிச்சு வாழ்ந்தேன். எனக்கு ஆதரவு கொடுத்து என்னை இத்தனை நாட்கள் கொண்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று பேசியிருக்கிறார்.