Bigg Boss 8 Grand Finale: ``முத்து கொடுத்த அட்வைஸ்; மன நிறைவுடன் வெளியேறுகிறேன்" எவிக்ட்டான ரயான்
கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.
அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் எனக் கலகலப்பாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இணைந்தனர். மொத்தமாக 24 பேரில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்ஷனில் ஜாக்குலின் வெளியேற, பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.
TTF டாஸ்க்கில் அதிரடி காட்டி அசத்தி டாஸ்க் பீஸ்ட் என பெயர்பெற்ற ரயான், பைனல் மேடையில் இரண்டாம் இடம் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஐந்து பேரில் முதல் ஆளாக மேடைக்கு வராமலே எவிட்டாகி இருக்கிறார் ரயான்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ரயான், "தினமும் எனக்கு பயிற்சி நாளாக இருந்தது, ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டேன். கடைசி நேரத்தில்தான் ஆட்டத்தைப் புரிந்து கொண்டு ஆடினேன். முத்துதான் எனக்கு மோட்டிவேஷன் கொடுத்தார். எனக்காக மன நிறைவுட ஆடியிருக்கிறேன்" என்றார் மகிழ்ச்சியுடன். கடும் உழைப்பைப் போட்ட ரயான் வெளியேறியிருப்பது எதிர்பாராத திருப்பமாக மாறியிருக்கிறது.