சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவ...
Bindhu Ghosh: ``நல்லா பழகுன சிலர் இப்ப வந்து பார்க்கலைன்னு வருத்தப்பட்டாங்க" - KPY பாலா
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமான நடிகை பிந்து கோஷ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் அவரைச் சந்தித்து அவரது சிகிச்சைக்காக உதவி செய்த 'கலக்கப்போவது யாரு' பாலாவிடம் பேசினோம்.
''ஒரு சீனியர் நடிகையா அவங்களைப் பத்தி எனக்குத் தெரியும். ஆனா சந்தித்ததில்ல, பேசினதில்ல. இந்த நிலையில் ஷகிலா மேடம் ஒரு நாள் என்கிட்ட பேசி, இவங்களுடைய பிரச்னையைப் பத்திச் சொன்னாங்க. உன்னால் ஏதாவது உதவி செய்ய முடிஞ்சா பண்ணுன்னு சொன்னாங்க. உடனே நான் அவங்க வீட்டுல போய் பார்த்தேன்.
என்னை அவங்க முன்ன பின்ன பார்த்ததில்லை. ஆனா ஷகிலா மேடம் சொல்லியிருப்பாங்க போல, அதனால என்னைப் பார்த்ததுமே அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினேன். பிறகு உடல்நிலை குறித்துக் கேட்டப்போ, சில டாக்டர்கள் குணமாக்கிடலாம்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்கறதா சொன்னாங்க. உடல் பாடாய் படுத்தினாலும் மனசளவுல ரொம்ப உற்சாகமாக இருந்தாங்க. அதனால மீண்டு வந்துடுவாங்கன்னே தோணுச்சு.
தன்னுடைய சினிமா நாள்களைப் பத்தி அவ்வளவு ஆர்வமா பேசினாங்க. பழைய நினைவுகள் அவங்ககிட்ட அப்படியே இருந்துச்சு.

உடன் நடித்த நடிகர் நடிகைகள் பத்தி விசாரிச்சப்போ, முன்னடி ரொம்ப நல்லா பழகுன சிலர் இப்ப வந்து பார்க்கலைன்னு வருத்தப்பட்டாங்க. ஒரு மணி நேரத்துக்கும் மேல பேசிக்கிட்டிருந்தேன். பிறகு என்னால் முடிஞ்ச ஒரு தொகையைக் கொடுத்துட்டு வந்தேன். வேறு ஏதாவது உதவினாலும் கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
பார்த்துட்டு வந்து ஒரு மாசம் கூட இருக்காது. அதுக்குள்ள இப்படி ஒரு சோகம் நடந்திருக்கு. ரொம்ப வருத்தமா இருக்கு.
தற்சமயம் நான் வெளியூர்ல இருக்கறதால அவங்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கேன்'' என்றார் பாலா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...