செய்திகள் :

BJP: 'வெளியான பாஜக நிர்வாகிகள் பட்டியல்' - கைவிடப்பட்டாரா விஜயதரணி?

post image

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநிலத் துணைத் தலைவர்களாகவும், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 பேர் மாநிலச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த விஜயதரணியின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த விஜயதரணிக்கு எந்தப் பதவியும் கிடைக்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமூர்த்தி பவன்

நிறைவேறாத கோரிக்கைகளும், பா.ஜ.க. நோக்கிய பயணமும்

விஜயதரணி தனது மாணவப் பருவத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அவருக்கு மாநில அரசியலைவிட டெல்லி அரசியலில் தான் அதிக நாட்டம் இருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மூலமாக டெல்லி லாபியில் ஈடுபட்டு வந்தார். அதன் காரணமாகக் கடும் எதிர்ப்பு இருந்தபோதும் மூன்று முறை எம்.எல்.ஏ. சீட்டைப் பெற்றார். ஒருகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அல்லது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குக் காய்களை நகர்த்தினார்.

இந்தச் சூழலில்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு, செல்வப்பெருந்தகையின் அரசியல் செல்வாக்கு ஓங்கியது. இதனால் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைத்தது. அதேபோல், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜேஷ்குமாருக்குப் பெற்றுத் தந்தார் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவிகளைப் பிடிக்கக் கடும் முயற்சி மேற்கொண்ட விஜயதரணிக்கு இந்த நிகழ்வுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்தன.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

இறுதியாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட எம்.பி. சீட் கேட்டார் விஜயதரணி. ஆனால், அவர் எம்.எல்.ஏ.வாக இருப்பதைக் காரணம் காட்டி கட்சித் தலைமை கைவிரித்துவிட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதரணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது பா.ஜ.க. அப்போது, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் அல்லது ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்தே விஜயதரணி பா.ஜ.க.வில் இணைந்தார்.

நீடித்த காத்திருப்பும் பகிரங்க ஆதங்கமும்

பா.ஜ.க-வில் இணைந்த பிறகும் கூட விஜயதரணியின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது டெல்லி சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், "கட்சிக்காக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். கடந்த முறை எனக்குத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக நீங்கள் சொன்னது நடக்கவில்லை. கவர்னர் பதவியை எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை" என வருத்தமாகப் பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு மீண்டும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் சீட் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், குமரியில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக முதலில் அழைத்துச் சென்ற அண்ணாமலை தரப்பு பின்னர் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

கமலாலயம்!

இதில் கடுப்பான விஜயதரணி, ஒரு பா.ஜ.க. நிகழ்ச்சியிலேயே தனது வருத்தத்தைப் பகிரங்கமாகப் போட்டுடைத்தார். "சில விஷயங்கள் என்னை கவர்ந்ததால் மட்டுமே நான் அதில் ஈடுபடுவேன். மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். இன்னும் இரண்டரை ஆண்டுகள் பாக்கி இருக்கும் நிலையில், அதை விட்டுவிட்டு பா.ஜ.க.வில் இருக்க வேண்டும் என வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேல்லாம் வரவில்லை. எதிர்பார்ப்போடுதான் வந்திருக்கிறேன்.

எல்லோரும் அப்படி நினைத்துக்கொண்டீர்கள் என்றால் தவறு. நன்றாக உழைக்க வேண்டும். கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். அதற்கு என்ன தேவை? ஏதாவது ஒரு பதவி தேவை. 6 மாதம் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். பேசி ஏதாவது நல்லது செய்வீர்கள். அண்ணாமலை கூட, 'அக்கா உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கட்சி உங்களை சரியாகப் பயன்படுத்தும்' எனச் சொல்லி வருகிறார். எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது" என்று பேசினார். ஆனாலும் அவருக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை.

விஜயதரணி

எதிர்காலம் என்ன?

மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் வந்த பிறகு தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என விஜயதரணி எதிர்பார்த்தார். ஆனால், இப்போது வெளியான பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் தனக்குப் பதவி கிடைக்காததால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

அதேநேரத்தில், விஜயதரணிக்கு நெருக்கமானவர்கள், "மகளிருக்கான பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அதில் அக்காவுக்கு உறுதியாக வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்தனர். விஜயதரணியின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவரது அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பா.ஜ.க.வில் அவரது காத்திருப்பு தொடருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு... மேலும் பார்க்க

Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷனுக்கு ஒரு விசிட்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2025-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே காவல் நிலையத்தில் தான்! ஒரு மாலை நேரத்தில் சென்னையோட முக்கிய நகரமான திருவல்லிக்கேணியில் இருக்கிற D1 ... மேலும் பார்க்க

OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் ... மேலும் பார்க்க

"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு..!" - திருமா

நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக பேசியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன்... மேலும் பார்க்க

TVK: "விஜய் நினைப்பதை போல் இல்லை... அரசியல் களம் மாறிவிட்டது" - திருமாவளவன்

சமீபத்தில் த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்த விஜய், "1967 மற்றும் 1977 ஆகிய அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம... மேலும் பார்க்க