செய்திகள் :

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

post image

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள் 2025 சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது.

கன்னட மொழியில் இருந்து புக்கர் பரிசை பெரும் முதல் எழுத்தாளராக பானு முஷ்டாக் திகழ்கிறார்.

'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தை பானு முஸ்டாக் கன்னடத்தில் எழுதினார், அதனை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி என்பவர் மொழிப்பெயர்த்து 'ஹார்ட் லேம்ப்' என வெளியிட்டார். இந்த பதிப்பு தான் சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளது.

மொழிபெயர்ப்பாளரான தீபா பாஸ்தி மற்றும் பானு முஷ்டாக் இருவரும் இணைந்து சர்வதேச புக்கர் பரிசை, லண்டனில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டனர்.

தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் எழுதப்பட்ட கதை தான் இது!

தனது இருபதுகளின் பிற்காலத்தில் இருந்து எழுத தொடங்கிய முஷ்டாக் ஒரு வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும் தனது அனுபவங்களில் இருந்து சமூக, மத மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் பெண்களின் போராட்டங்களை இதில் விவரிக்கின்றார்.

1990 முதல் 2023 வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதானத்துடன் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பான ’ஹார்ட் லாம்ப்’ இந்த சர்வதேச புத்தர் விருதை வென்றுள்ளது.

இதன் மூலம் எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கும், மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்திக்கும் 50,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.48 லட்சம்) பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், கீதாஞ்சலிஸ்ரீ மற்றும் மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் ஆகியோரின் ஹிந்தி நாவலான 'டோம்ப் ஆஃப் சாண்ட்' இந்தியா சார்பில் முதலாவது புக்கர் பரிசை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பானு முஷ்டாக்?

1948 ஆம் ஆண்டு கர்நாடாகவில் உள்ள ஹாசனில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் பானு முஸ்டாக். இவர் சிறு வயதிலிருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

பானு எட்டு வயதில் சீமக்காவில் உள்ள ஒரு கன்னட மொழிப் பள்ளியில் கன்னடத்தைப் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

இவருக்கு கன்னடம், இந்தி, தக்னி உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசத்தெரியும். ஆரம்பத்தில் பானு லங்கேஷ் பத்திரிகே (Lankesh Patrike) செய்தித்தாளில் செய்தியாளராக பணியாற்றி இருந்திருக்கிறார். சில மாதங்கள் பெங்களூருவில் உள்ள அனைத்திந்திய வானொலியில் பணியாற்றி இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்க... மேலும் பார்க்க

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட... மேலும் பார்க்க

Hindi: "இந்தியாவில் இந்தியில்தான் பேசுவேன்" - வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த வங்கி அதிகாரி

வங்கிகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியில் பேசும்போது வாடிக்கையாளர்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிரா வங்கிகளில் இந்தியில் பேசிய வங்கி அதிகாரியை நவநிர்மாண் சேனா... மேலும் பார்க்க

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு, வருமானம் எவ்வளவு தெரியுமா?

வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் வருமானம் குறித்தும், எப்படி வருமானம் ஈட்டப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.மறைந்த போப் பிரான்ஸ் தனது பதவி காலத்தின் தொடக்கத்தில் இருந்து நிதி சார்ந... மேலும் பார்க்க