செய்திகள் :

Chenab Bridge: "தேவையில்லாமல் என்னை பிரபலமாக்காதீர்கள்" - முக்கிய இன்ஜினீயர் மாதவி லதா பதிவு!

post image

ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தைக் கடந்த வெள்ளி அன்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் பேராசிரியர் ஜி மாதவி லதாவை நாடே கொண்டாடும் சூழலில், தன்னை தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.

முனைவர் லதா செனாப் பாலத்தை கட்டிய ஆஃப்கான்ஸ் நிறுவனத்தின் புவி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அவர், கவனிக்கப்படாத ஆயிரக்கணக்கான ஹீரோக்களை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

செனாப் ரயில் பாலம்

"சரிவான பகுதிகளில் நிலைத்தன்மையை உருவாக்குவதும், சாய்வான இடங்களில் அடித்தளம் அமைக்கவும் உதவுவதே எனது பணியாக இருந்தது" என லின்க்ட் இன் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட செனாப் ரயில் பாலத் திட்டத்தில் 17 ஆண்டுகளாக பங்களித்து வருகிறார் மாதவி லதா. அவர் குறித்து "செனாப் திட்டத்துக்குப் பின்னிருந்த பெண்", "பாலம் கட்ட நடந்த அற்புதங்கள்" போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகளை ஆதாரமற்றவை என விமர்சித்துள்ளார்.

"என்னைத் தேவையில்லாமல் பிரபலப்படுத்தாதீர்கள்... செனாப் பாலத்துக்காக பாராட்டப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒரு ஆள்" எனக் கூறியுள்ளார்.

மாதவி லதா
மாதவி லதா

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில்(IISc) பேராசிரியராக இருக்கும் மாதவி லதா அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "பல தந்தைகள் அவர்களது மகள்கள் என்னைப் போல ஆக வேண்டும் எனக் கூறியுள்ளனர், பல இளம் மாணவர்களும் சிவில் இஞ்சினியரிங் இப்போது படிக்க விரும்புவதாக மெஸ்ஸேஜ் செய்கின்றனர்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

பலரும் சாத்தியமற்றது எனக் கருதிய பணியை செய்து முடித்ததற்காக இந்திய ரயில்வே மற்றும் ஆஃப்கான்ஸ் நிறுவனத்தை வாழ்த்தினார். "எல்லா புகழும் இந்திய ரயில்வேக்கே" எனத் தெரிவித்துள்ளார்.

செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது. இந்திய ரயில்வே இதை ரூ.1,486 கோடி செலவில் கட்டியுள்ளது, இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த பாலத்துக்கான அடித்தளத்தை அமைப்பதில் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. முந்தைய அறிக்கைகளில் கவனிக்கப்படாத உடைந்த பாறைகள் மற்றும் மறைக்கப்பட்ட துவாரங்களைக் கருத்தில்கொண்டு சாய்வில் நிலைத்தன்மையை வழங்கும் வடிவமைப்பை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார் மாதவி லதா.

செனாப் ரயில் பாலத்துக்கான ஆய்வுகள் பற்றிய இவரது அறிக்கை,  'Design as You Go: The Case Study of Chenab Railway Bridge' என்ற பெயரில் இந்திய புவி தொழில்நுட்ப இதழின் சிறப்பு பெண்கள் பதிப்பில் வெளியாகியுள்ளது.

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க

Air India: `கடைசி உரையாடல்' - விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க

`மரத்தில் வந்த தண்ணீர்' - மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது. இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணிய... மேலும் பார்க்க

``லக்கேஜ் குறைக்க முடியாது..'' - விமான நிலையத்தில் தரையில் புரண்டு அழுத சீன பெண்.. என்ன நடந்தது?

இத்தாலி விமான நிலையத்தில் சீன பெண் ஒருவர் தரையில் புரண்டு அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நியூயார்க் போஸ்ட் இணையதளத்தில் வெளியான தகவலின் படி, சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அந்த பெண், ... மேலும் பார்க்க

போலோ விளையாடியபோது மாரடைப்பு; நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு பின்னர் 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். சஞ்சய் கபூர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: ``ட-வடிவ பாலம்; வாகனங்கள் எப்படி செல்லும்?'' - எதிர்க்கட்சிகள் காட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் 2023-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்... மேலும் பார்க்க