செய்திகள் :

Community Certificate: 60 ரூபாய் போதும்! - ஆன்லைனில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

post image

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசுத்தேர்வை எழுதுபவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள சாதிச் சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். குறிப்பாக தற்போது 10ம், 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எழுதி முடித்திருக்கிறார்கள்.

students
students

அடுத்தக் கட்டமாக 11-ம் வகுப்பு செல்வதற்கும், கல்லூரியில் சேர்வதற்கும் அவர்களுக்கு சாதி சான்றிதழ் மிகவும் அவசியம். இந்த சாதி சான்றிதழ் இல்லாதவர்கள் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

* புகைப்படம்

* முகவரி சான்று

* ஆதார் கார்டு

* ஸ்மார்ட் ரேஷன் கார்டு

* பெற்றோர் சாதிச் சான்றிதழ் அல்லது உடன்பிறந்தவர்களின் சாதிச் சான்றிதழ். குடும்பத்தில் யாரிடமும் சான்றிதழ் இல்லையென்றால், நீங்கள் இந்தப் பிரிவை சார்ந்தவர்தான் என்று உங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) இருந்து கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதம் வேண்டும்.

community certificate||Representation images
community certificate |Representation images

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

* முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தளத்துக்கு செல்லவும். அதில் Citizen login/பயனாளர் உள்நுழைவு என்பதை க்ளிக் செய்து உள்நுழையவும்.

* உள்நுழைந்ததும் login செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே register செய்திருந்தால் உங்களுடைய user name, password உள்ளீடு செய்து login செய்யவும்.

* login செய்த பிறகு உங்களுக்கான dashboard ஒன்று திரையில் காண்பிக்கப்படும். இதில் முதலில் department என்ற தேர்வு இருக்கும். அதில் Revenue Department-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

* தொடர்ந்து அதில் சாதிச் சான்றிதழ் (community certificate) என்பதை க்ளிக் செய்யவும். பின், நீங்கள் அப்ளை செய்வதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். படித்துப் பார்த்த பின் proceed என்பதை க்ளிக் செய்யவும்.

* இந்த இடத்தில் உங்களுடைய CAN (Citizen Access Number) நம்பரை register செய்யவும். உங்களுடைய CAN நம்பர் தெரிந்தால் register செய்யவும். ஒருவேளை உங்களுக்கு உங்களுடைய CAN நம்பர் தெரியவில்லை எனில், அந்தப் பகுதியின் கீழே உங்களுடைய ஆதார் குறித்த விவரங்கள் கேட்கப்படும். அதனை உள்ளீடு செய்துவிட்டு search என்ற பகுதியை க்ளிக் செய்தால், உங்களுடைய CAN நம்பர் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

அதனை கிளிக் செய்து, கீழேயே உங்களுடைய ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்யவும். அதன் பின் உங்களுடைய எண்ணிற்கு ஒரு OTP வரும். அதனை கொடுத்துவிட்டு, proceed என்பதை க்ளிக் செய்யவும்.

payment
payment

* அதன்பின் உங்களுடைய பெற்றோரின் community மற்றும் caste விவரங்களை நிரப்பவும். 

* submit கொடுத்த பின் ஒவ்வோர் ஆவணத்தையும் அடுத்தடுத்து upload செய்ய வேண்டும்.

* ஆவணம் அனைத்தையும் upload செய்த பின், make payment என்பதை க்ளிக் செய்து, terms and conditions என்பதை க்ளிக் செய்த பின் make payment கொடுக்கவும். உங்களுக்கு எந்த முறையில் பணம் செலுத்த முடியுமோ அதைத் தேர்வு செய்து, ரூ. 60 செலுத்தவும். பின் உங்களுக்கு ஒரு acknowledgement slip கொடுக்கப்படும்.

எல்லாவற்றையும் பூர்த்தி செய்து, அப்லோடு செய்த பிறகு உங்களுடைய படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உங்களது ஃபோனிற்கு மெசேஜ் வரும்.

அதன் பின் இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்று சரிபார்க்கப்பட்டு, 10 நாள்களுக்குள்ளாக உங்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கப்பெறும்.

அப்ளை செய்யும்போது உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் acknowledgement slip-ல் உள்ள எண்ணை வைத்து, சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Tamil nadu e sevai maiyam
Tamil nadu e sevai maiyam

இந்த முறையில் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய சாதிச் சான்றிதழை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது, தேவைப்படும் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று அவர்களின் உதவி பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள தாசில்தார் அலுவலகங்களும் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி: இந்திய குடிமைப்பணித் தேர்வின் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா!

இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப்பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 21 இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பொதுப்பணியாளர் தேர்... மேலும் பார்க்க

தொடரும் வேலைவாய்ப்பின்மை; பாய்ச்சல் காட்டும் ஏ.ஐ - இனி என்ன படிக்கலாம்?!

மத்தியிலோ மாநிலத்திலோ எந்த ஆட்சி வந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பேசுவதற்கும், அதற்கான தீர்வை முன்வைப்போம் என்ற வாக்குறுதி அளிப்பதற்கும் தவறியதே கிடையாது. பிரதமர் மோடியின் அதிமுக்கிய வாக்க... மேலும் பார்க்க

விரிவான அலசல்: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஏன்? - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

விடுதலை இந்தியாவின் அரசு எவ்வாறு அமைய வேண்டும் என்று விவாதித்து முடிவு மேற்கொண்ட இந்திய அரசு அமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), பல்வேறு மொழிவாரி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின்... மேலும் பார்க்க