கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!
Coolie: 'அப்பாவை எப்போதுமே ரொம்ப பிடிக்கும்; ஆனால் தற்சமயம் நான் ரஜினி சார்...' - ஸ்ருதி ஹாசன்
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஹைதராபாத்தில் 'கூலி' படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் ஸ்ருதி ஹாசனிடம் நீங்கள் யாருடைய ஃபேன் (Fan) என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், "அப்பா எப்போதுமே எனக்கு நம்பர் ஒன் தான். அப்பாவை எப்போதுமே ரொம்ப பிடிக்கும். தற்சமயம் நான் ரஜினி சார் ரசிகை. இது தான் என்னுடைய பேலன்ஸ்.
ரஜினி சாரை முதல் முறை சந்தித்தபோதே பவர் ஹவுஸ் மாதிரி இருந்தது. அப்படி ஒரு எனர்ஜி அவரிடம் இருக்கும்.
என் வாழ்க்கையில் ரஜினி சாருடன் இணைந்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை. அதைப் பற்றி நான் யோசித்தது கூட இல்லை.
லோகேஷ் கனகராஜ் என்னிடம் இந்தப் படம் தொடர்பாக வந்து பேசியபோது கனவுப்போல் இருந்தது.

ரஜினி சார் தவிர நாகார்ஜுனா சார், ஆமிர் கான் சார், உபேந்திரா சார், சத்யராஜ் சார், சௌபின் சார் என எல்லோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே ஒரு நடிகையாக இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ஒரு சிறந்த தருணமாகவும், அனுபவமாகவும் இருந்தது. நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...