செய்திகள் :

CPM : `நீல வானமாக மாறிய சிவப்பு’ - விமர்சனத்துக்குள்ளான நிற மாற்றம்; கம்யூனிஸ்ட் விளக்கம் என்ன?

post image

மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக வலைதள `டிஸ்பிளே பிக்சரில்’ (DP) அந்தக் கட்சி சின்னத்தின் நிறமான சிவப்பு மாற்றப்பட்டுள்ளது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் சிவப்பு நிற பேக் கிரவுண்டில் வெள்ளை நிற சுத்தியல் மற்றும் அரிவாள் சின்னம் அனைவரும் நன்கு அறிந்தது ஆகும். கம்யூனிஸ்ட் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அந்த சிவப்பு தான்.

இந்நிலையில், தற்போது மேற்கு வங்காளத்தில் அக்கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் இந்த சின்னத்தின் பேக் கிரவுண்ட் நீல வான நிறத்திலும், சுத்தியல் மற்றும் அரிவாள் தங்க நிறத்திலும் மாற்றப்பட்டுள்ளது. இது தான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம்.

சின்னம் மாற்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் பதில் என்ன?

இதில் என்ன சர்ச்சை?

நீல வான நிறத்துக்கும், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணமூல் காங்கிரஸுக்கும் சம்பந்தம் உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள் பலர். அது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிடித்தமான நிறமாம். அப்படியிருக்கையில், தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதே பேக் கிரவுண்டை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வைத்துள்ளது, 'அவர்கள் திரிணமூல் காங்கிரஸிடன் சரணடைந்துவிட்டதாக காட்டுகிறது' என்று இந்த செயலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

8 முறை மாற்றம்

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, "இது வெறும் சின்னத்தில் சிறிய மாற்றம் தான். சமீபத்திய ஆண்டுகளில் 8 முறை சின்னத்தை மாற்றியுள்ளோம். எங்களுடைய கொடி என்றும் சிவப்பாக தான் தொடரும். 'சுரண்டலை தடுக்க வேண்டும்' என்ற கொள்கையில் இருந்து நாங்கள் என்றும் மாறுபட மாட்டோம்" என்று கூறியிருக்கிறது.

அவர்களுக்கானது அல்ல...

இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சதரூப் கோஷ், "வானம் என்பது திரிணமூலுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று பதிலளித்துள்ளார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

`எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை!' - அதிமுக, பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலை பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென டெல்லிக்கு விசிட் அடித்து, பாஜக-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து, 45 நிமிட... மேலும் பார்க்க

TVK: டார்கெட் 'கருணாநிதி' குடும்பம்; பெண் வாக்காளர்களுக்கு குறி - பொதுக்குழுவில் போடப்பட்ட ஸ்கெட்ச்

'தவெகவின் முதல் பொதுக்குழு!'தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வின் ஒவ்வொரு பேச்சையும் உடைத்துப் பார்த்தால் நிறையவே அரசியல் செய்திகளை உள்ளடக்கி வைத்திருக்கிறார்கள். திம... மேலும் பார்க்க

அமித் ஷா vs கனிமொழி: தமிழ் அகதிகள் பற்றி திமுக பேசவில்லையா? - வீடியோவுடன் பதிலளித்த கனிமொழி!

நாடாளுமன்றத்தில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025-ன் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதவின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்து பேசிய அமித் ஷா, அகதிகளுக்கென்று தனி சட்டம் தேவையில்லை... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மம்தாவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவர்கள்! - என்ன நடந்தது?

லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் (Kellogg College) உரையாற்றியிருக்கிறார். அப்போது, லண்டனில் உள்ள இந்... மேலும் பார்க்க

TVK : தவெக தலைவர் விஜய்க்கு பெற்றோரின் வாழ்த்து - முதல் பொதுக்குழு கூட்டம் | Photo Album

தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய் மேலும் பார்க்க

தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." - கொந்தளித்த ஆனந்த்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முதல் பொதுக்குழுக் கூட்டத்தைத் திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திவருகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பொதுச... மேலும் பார்க்க