செய்திகள் :

CSK : தோனி வந்தா மட்டும் போதுமா... கப் வேணும் பிகிலு; ருத்துராஜ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

post image

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. காலம் காலமாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் முதல் 2கே கிட்ஸ் வரை ஐபிஎல்லில் ஆச்சர்யமாகப் பார்க்கின்ற இரண்டு விஷயம், ஒன்று, இப்படி ஒரு டீம் கிடைச்சும், 17 வருஷமா ஆர்.சி.பி எப்படி கப் ஜெயிக்காம இருக்கு என்பது. மற்றொன்று,

2019-க்கு அப்புறம் இன்டர்நேஷனல் மேட்சே ஆடாத ஒருத்தருக்கு, வருஷத்துல 2 மாதம் மட்டும் ஐபிஎல்லில் `தல' காட்டுகிற ஒருத்தருக்கு ஹோம் கிரவுண்ட் மட்டுமில்லாம எல்லா கிரவுண்ட்டும் ஹோம் கிரவுண்ட் என்கிற அளவுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பா! என்று ரசிகர்கள் வியக்கவைப்பது.

சரி அப்படிப்பட்ட மாஸான பிளேயரோட, இல்ல இல்ல லெஜென்ட்டோட டீம் இந்த சீசன்ல எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்.!

CSK
CSK

பேட்ஸ்மேன்கள்

ருத்துராஜ் கெய்க்வாட் (C)

டெவான் கான்வே

ராகுல் திரிபாதி

ஷேக் ரஷீத்

ஆண்ட்ரே சித்தார்த்

தோனி (WK)

வான்ஷ் பேடி (WK)

ஆல்ரவுண்டர்ஸ்

ரச்சின் ரவீந்திரா

விஜய் ஷங்கர்

ஆர் அஸ்வின்

ரவீந்திர ஜடேஜா

சாம் கரண்

தீபக் ஹூடா

ஷிவம் துபே

அன்ஷுல் கம்போஜ்

ஜேமி ஒவர்டன்

கமலேஷ் நாகர்கோட்டி

ராமகிருஷ்ணா கோஷ்

பவுலர்கள்

கலீல் அகமது

நூர் அகமது

முகேஷ் சவுத்ரி

குர்ஜப்னீத் சிங்

நேதன் எல்லிஸ்

ஷ்ரேயாஸ் கோபால்

மதீஷா பத்திரானா

அணியை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும். இது ஆல் ரவுண்டர்களின் ராஜ்ஜியம் கொண்ட ஒரு அணி என்பது!

சிஎஸ்கே பொறுத்தவரை இத்தனை ஆண்டுகாலம் சிறப்பாக விளையாடிவருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவர்களின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்ததுதான்.

ஹைடன் - ஹஸ்ஸி, முரளி விஜய் - ஹஸ்ஸி, மெக்கல்லம் - டுவைன் ஸ்மித், டு பிளெஸ்ஸிஸ் - வாட்சன், டெவான் கான்வே - ருத்துராஜ் ஆகிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்கள் சிறப்பாகப் பங்காற்றியிருக்கின்றன. 2023-ல் சென்னை சாம்பியன் பட்டம் வென்றதில் கான்வேயும் (672 ரன்கள்), ருத்துராஜும் (590 ரன்கள்) ஓப்பனிங்கில் மிகப்பெரிய பங்காற்றியது முக்கிய காரணம்.

கான்வே - ருத்துராஜ்
கான்வே - ருத்துராஜ்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த சீசனில் காயம் காரணமாக கான்வே தொடரிலிருந்து வெளியேறியதால், ரச்சின் ரவீந்திரா - ருத்துராஜ் ஓப்பனிங் இறங்கினர். இருவரும் தனித்தனியே ஓரிரு ஆட்டங்களில் சோபித்தார்களே தவிர கூட்டாக நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமையக்கவில்லை. கடந்த சீசனில், பவர்பிளேயில் மிகக் குறைந்த ஆவரேஜ் 21.4, மிகக் குறைந்த ரன்ரேட் 7.79 கொண்ட ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும் ரச்சின் ரவீந்திரா - ருத்துராஜ்தான். எனவே, இந்த சீசனில் அந்தப் பிரச்னையை சரிசெய்வது மிக முக்கியம்.

எனவே, இங்கு ருத்துராஜுடன் ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங் இறங்குவாரா அல்லது கான்வே இறங்குவாரா என்பது அணியை பலப்படுத்தக்கூடிய முக்கிய ஃபேக்டராக அமையலாம். ரச்சின் ரவீந்திரா. நடந்த முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து அணியில் ஒப்பனராக களமிறங்கி தொடர் நாயகன் விருது வென்று சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். அதேபோல், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியோடு கான்வே பென்ச்சில் அமரவைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முந்தைய பாகிஸ்தான் vs நியூசிலாந்து vs தென்னாபிரிக்கா முத்தரப்பு தொடரில் சிறப்பாக ஆடியிருந்தார்.

 ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா

எனவே, இந்த சீசனில் ருத்துராஜ் - ரச்சின் ரவீந்திரா அல்லது கான்வே யார் ஆடப்போகிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேசமயம், சுரேஷ் ரெய்னா சென்ற பிறகு நம்பர் 3 ஸ்லாட், கைமாறிக்கொண்டே வருகிறது. அந்த இடத்தை இந்த சீசனுக்கென்று தற்காலிகமாக ஒருவரை நிரப்பாமல், தொலைநோக்குப் பார்வையோடு சரியான நபரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரெய்னா சென்ற பிறகு, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரஹானே போன்றோர் அந்த இடத்தில் சிறப்பாக ஆடியிருந்தாலும் ஒரு சாலிட் லாங் டெர்ம் பிளேயர் நம்பர் 3-க்கு தேவைப்படுகிறார். அந்த எக்ஸ் ஃபேக்டர் பிளேயராக சிஎஸ்கே யாரைத் தேர்வு செய்யும் அணித்தேர்வில் இருக்கும் சுவாரஸ்யம்.

அணியில் மிடில் ஆர்டரில் எக்கச்சக்க பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். நான்காவது விக்கெட்டுக்கு திரிபாதி பெஸ்ட் ஃபிட் பிளேயராக இருப்பார். திரிபாதியைப் பொறுத்தளவில் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக ஆரம்பித்து தேவையான நேரத்தில் ஹிட்டிங் மோடுக்கு செல்வார். இதுவரை ஸ்டெடி அண்ட் காம்போஸுட் பேட்டிங் லைன்அப் ஓகே, ஆனால் அதற்குப் பிறகு, யார் பந்துவீசினாலும் அடிக்கக்கூடிய, எதிரணியை அச்சுறுத்தக் கூடிய பவர் ஹிட்டர் யார்...

ஷிவம் துபே
ஷிவம் துபே

ஷிவம் துபே இருந்தாலும் ஸ்பின் ஓவர்களைத் தாண்டி பேஸ் ஓவர்களையும் அவர் அடிக்க வேண்டும் அல்லவா... விஜய் ஷங்கர், தீபக் ஹூடா ஆகியோர் பவுண்டரிஸ் அடிக்கக்கூடியவர்களாகத் தெரிந்தாலும், கடந்த சீசனில் இருவரின் ஆவரேஜ் 25 கூட இல்லை. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரும் இந்த லிஸ்டில் இருந்தாலும் இவர்கள் ஃபினிஷிங் ரோல் செய்யக்கூடும்.

தோனி மட்டும் இதில் விதிவிலக்கு. தோனி இன்றும் பவர் ஹிட்டர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கடந்த சீசனைப் போல ஒரு விக்கெட் போயிருந்தாலும் ஆறு விக்கெட் போயிருந்தாலும் கடைசி இரண்டு ஓவரில் தோனிதான் இறங்கப்போகிறார் எனில் அதுவே அணிக்கு சாதகமாகவும் அமையலாம், பாதகமாகவும் அமையலாம்.

தோனி
தோனி

எனவே, யாராவது ஒருவர் மிடில் ஓவர்களில் ஸ்பின் அண்ட் பேஸ் இரண்டையும் பொளக்கக்கூடிய பவர் ஹிட்டராக உருவெடுக்க வேண்டும். இல்லையெனில் அணி நிர்வாகமே அந்த ஒரு ரோலை உருவாக்க வேண்டும். அதே சமயம், மிடில் ஆர்டரில் அணிக்கு சாதகமாக இருக்கும் ஒரு விஷயம், மிடில் ஆர்டர் முழுக்க இந்திய வீரர்களால் நிரம்பியிருக்கிறது. அதனால், வெளிநாட்டு பிளேயர் லிமிட் இந்த இடத்தில் பெரியளவில் சிக்கலைத் தராது.

அணியில் ஸ்பின் யூனிட் அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகிய ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஸ்பின்னர்களுடன் வலுவாக இருக்கிறது. மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் வேளையில் கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் மூவரையுமே அணியில் எடுக்கலாம். குறிப்பாக சென்னையில் 7 போட்டிகள் ஆடுவது பலம். இவர்களோடு, ரச்சின் ரவீந்திராவும் விக்கெட் எடுத்துத் தரக்கூடிய ஸ்பின்னராக இருக்கிறார்.

ஜடேஜா - அஸ்வின்
ஜடேஜா - அஸ்வின்

மேலும், கூடுதல் முழுநேர ஸ்பின்னராக ஷ்ரேயாஷ் கோபாலும் ஆப்ஷனில் இருக்கிறார். மறுபக்கம், பேஸ் பவுலிங்கில் காயம் ஏற்படாமல் முழு உடற்தகுதியுடன் சீசன் முழுவதும் பத்திரானா ஆடும்பட்சத்தில் அவருடன் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் கலீல் அகமது / குர்ஜப்னீத் சிங் / முகேஷ் சவுத்ரி / கமலேஷ் நாகர்கோட்டி / அன்ஷுல் காம்போஜ் ஆகிய இந்திய வீரர்கள் பேஸ் பவுலர் ஆப்ஷனில் இருக்கின்றனர்.

வெளிநாட்டு பிளேயர் ஆப்ஷனில் சாம் கரண் / ஜேமி ஓவர்டன் / நேதன் எல்லிஸ் ஆகியோர் இருக்கின்றனர். ஒருவேளை, பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டும்பட்சத்தில் பேஸ் பவுலிங்கை சாம் கரண் வழிநடத்தலாம். அப்படியில்லாமல் பத்திரானா ஃபிட்னஸாக இருந்து, மைதானம் சுழலுக்கு சாதகமாக இல்லாதபட்சத்தில் வெளிநாட்டு பிளேயர் ஸ்லாட்டில் நூர் அகமதுவுக்குப் பதில் சாம் கரண் பிளெயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. சாம் கரண் பிளெயிங் லெவனில் இடம்பெறுவது ஆல்ரவுண்டர் முறையில் அணிக்கு கூடுதல் பலமே. ஜேமி ஓவர்டனும் பேஸ் ஆல்ரவுண்டர் ஆப்ஷன்.

தோனி, பத்திரானா
தோனி, பத்திரானா

உத்தேச பிளெயிங் 11:

ருத்துராஜ்

ரச்சின் ரவீந்திரா (OP)

டெவான் கான்வே(OP)

ராகுல் திரிபாதி

ஷிவம் துபே

ரவீந்திர ஜடேஜா

தோனி

நூர் அகமது / சாம் கரண் (OP)

அஸ்வின்

கலீல் அகமது

அன்ஷுல் கம்போஜ் / முகேஷ் சவுத்ரி / கமலேஷ் நாகர்கோட்டி / குர்ஜப்னீத் சிங்

பத்திரானா / நேதன் எல்லிஸ் / ஜேமி ஓவர்டன் (OP)

எப்படிப்பட்ட பிளெயிங் லெவனைத் தேர்வுசெய்தாலும் களத்தில் ஒட்டுமொத்த அணியின் செயல்பாட்டைப் பொறுத்தே வெற்றி கிடைக்கும். அந்த வகையில், தோனியின் ஆலோசனையோடு ஒரு கேப்டனாக ருத்துராஜ் எவ்வளவு சிறப்பாக அணியைக் கையாளப்போகிறார் என்பதை மும்பைக்கெதிரான (மார்ச் 23) முதல் போட்டி முதல் களத்தில் பார்ப்போம்.!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன் - Team Analysis

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்தின்போது மற்ற அணிகளை விடவும் சற்று சோகத்தில் இருப்பது அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அணிதான். ஏனெனில் மற்ற அணிகளெல்லாம், அடுத்த சீசனி... மேலும் பார்க்க

IPL 2025: ``கடினமான தருணங்களில் கோலி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்'' - கோலி குறித்து சிராஜ்

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இதற்கு முன்பு ஆர்சிபி அணிக்காக விளையாடி இருந்தார். சிராஜ் இந்நிலையில... மேலும் பார்க்க

Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? - சென்னை மாநகராட்சி திட்டம்

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.IND v NZ - Ravichan... மேலும் பார்க்க

KKR vs RCB: IPL 2025 முதல் போட்டி ரத்தாக வாய்ப்பா? காரணம் என்ன?

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்க... மேலும் பார்க்க

IPL 2025: 10 கேப்டன்கள் முன் நிற்கும் 10 சவால்கள்; இதைச் சமாளிப்பார்களா?

18 வது ஐ.பி.எல் சீசன் நாளை தொடங்கவிருக்கிறது. எல்லா அணிகளும் ஒரு நீண்ட கிரிக்கெட் சீசனுக்குத் தயாராகிவிட்டன. நிறைய புதிய கேப்டன்கள் அணிகளின் தலைமையை ஏற்றிருப்பதுதான் இந்த சீசனின் சுவாரஸ்யமான அம்சமாக இ... மேலும் பார்க்க

Dhoni : 'தோனி ஆடும் வரை இப்படித்தான் நடக்கும்..!' - லக்னோ அணியின் மென்டார் ஜாகிர் கான் ஓப்பன் டாக்

கடந்த ஐபிஎல் சீசன்களில் லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடியபோது, மிகப்பெரிய அளவில் தோனிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தினார்... மேலும் பார்க்க