Dhoni : 'தோனி ஆடும் வரை இப்படித்தான் நடக்கும்..!' - லக்னோ அணியின் மென்டார் ஜாகிர் கான் ஓப்பன் டாக்
கடந்த ஐபிஎல் சீசன்களில் லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடியபோது, மிகப்பெரிய அளவில் தோனிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தினார்கள். போட்டி சேப்பாக்கத்தில் நடக்கிறதா? அல்லது லக்னோ ஏக்னா மைதானத்தில் நடக்கிறதா? என்று குழப்பமடையும் அளவுக்கு நிலைமை இருந்தது. லக்னோ மட்டுமல்ல, மற்ற மைதானங்களிலும் இது தான் நிலைமை.

இந்நிலையில் லக்னோ அணியின் மென்டராக பொறுப்பேற்றிருக்கும் ஜாகிர் கான் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, `இந்த முறை மைதானத்தில் நீலக்கடலை(லக்னோ ஜெர்சி நிறம்) எதிர்பார்க்கலாமா?’ என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்குப் பதிலளித்த அவர், " தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக்கொண்டு இருக்கும் வரை, அனைத்து மைதானங்களிலும் மஞ்சள் நிறம் ஆதிக்கம்தான் இருக்கும்.
அவர் விளையாடும் போட்டிகள் மற்ற இடங்களில் நடைபெற்றால் கூட அங்கு மஞ்சள் நிற ஆதிக்கம்தான் இருக்கும் என்பதை நான் உறுதியாக சொல்வேன். நான் இதனை சொல்லவில்லை என்றாலும் கூட ரசிகர்களே அதை தான் விரும்புவார்கள். அந்த அளவுக்கு தோனியை மக்களுக்கு பிடித்திருக்கிறது.

எனவே, அவர் விளையாடும் வரை நிச்சயமாக அந்த மாஸான ரசிகர்கள் கூட்டம் எப்போதும் அவருக்காக இருக்கும்” எனவும் ஜாகிர் கான் தெரிவித்திருக்கிறார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks