செய்திகள் :

Dies Irae: மிரட்டும் திகிலுடன் வருகிறது `டைஸ் ஐரே' - பிரமயுகம் இயக்குநரின் அடுத்தப் படைப்பு!

post image

2024-ம் ஆண்டின் சிறந்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது பிரமயுகம். இந்தப் படத்தில், மம்மூட்டியின் நடிப்பு, திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை சிறப்பாக அமைந்ததாகக் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் மிகுந்த பாராட்டைப் பெற்றது. ராகுல் சதாசிவன் இயக்கிய இந்தப் படத்தை 'நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்' தயாரித்தது.

டைஸ் ஐரே
டைஸ் ஐரே

தற்போது மீண்டும் சதாசிவம் இயக்கும் இரண்டாவது படத்தை 'நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பெயர் 'டைஸ் ஐரே' எனப் படக்குழு இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் சக்ரவர்த்தி ராமச்சந்திரன், " 'பிரமயுகம்' போன்ற படத்தின் மூலம், இந்திய திகில் படங்கள் என்ன சாதிக்க முடியும் என்பதைக் காட்டினோம். டைஸ் ஐரே திரைப்படம் பிரமயுகத்துக்கு அடுத்த படியாகும். இந்தப் படத்தின் மூலம் பிரணவ் மோகன்லால் ஒரு வலுவான முத்திரையைப் பதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

பிரம்மயுகம் (Bramayugam)

'டைஸ் ஐரே' என்றால்?

'டைஸ் ஐரே' என்ற சொற்றொடர் முதலில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பயன்படுத்தப்படும் 13-ம் நூற்றாண்டின் லத்தீன் பாடலில் இருந்து வந்தது. இதன் பொருள் இறுதித் தீர்ப்பு என்பதாகும். காலப்போக்கில், இந்த சொற்றொடர் பயம், அழிவு மற்றும் தெரியாதவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. திகில் அனுபவத்துக்கு இந்தத் தலைப்பு சரியாகப் பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

புதிய திகில் அனுபவம்

இந்தப் படம் குறித்துப் பேசிய இயக்குனர் ராகுல் சதாசிவன், ``'டைஸ் ஐரே' திரைப்படம் எனது முந்தைய படைப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படம் புதிய அனுபவங்களை ஆராய்ந்து, இளைய தலைமுறையினரின் திகில் அனுபவத்துடன் இணைகிறது. இது ஒரு வித்தியாசமான பாணி என நம்புகிறேன்.

டைஸ் ஐரே படக்குழு
டைஸ் ஐரே படக்குழு

இந்திய திகில் படங்களை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிரபார்க்கிறோம்" என்றார்.

Narivetta Review: உணர்வுபூர்வமான வேடத்தில் டொவினோ தாமஸ்; காவல் அதிகாரியாக சேரன்; இந்த வேட்டை எப்படி?

ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ், படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர முயன்று வருகிறார். ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வ... மேலும் பார்க்க

"பேசில் நீங்க பீல்டிங் நில்லுங்க, நான் பெளலிங் போடுறேன்!" - நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிய சாம்சன்

இந்தாண்டு ஐ.பி.எல். சீசனின் அனைத்து போட்டிகளும் ராஜஸ்தான் அணிக்கு முடிவடைந்துவிட்டன. 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது ராஜஸ்தான் அணி. ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்து, புள்ளிப் பட்டியல... மேலும் பார்க்க

HBD Mohanlal: இந்த தமிழ் படங்கள் இவர் படத்தோட ரீமேக்கா? மோகன்லால் படங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ஜெயிலர் படத்துல ரெண்டு சீன் வந்தாலும் தன்னோட கெத்து மேனரிஸத்தால ரெண்டு சீனையும் அள்ளி தின்னுட்டு போனவரு நம்ம லாலேட்டன் மோகன்லால். லால பத்தி சொல்லணும்னா, 'நம்ம ஊர்ல எப்படி நம்ம ரஜினியோ, அவுங்க ஊர் கேரள... மேலும் பார்க்க

Mohanlal: Biography புத்தக அறிவிப்பு; பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மோகன்லாலின் ட்ரீட்!

மலையாள திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'எம்புரான்' மற்றும் 'தொடரும்' ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து மோகன்லாலின் பெர... மேலும் பார்க்க

Cannes 2025: ``அது எனக்கு பலமாக இருந்தது!'' - கேன்ஸ் பட விழாவில் ஜூரியாக பயால் கபாடியா!

78-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நேற்றைய தினம் தொடங்கியது. கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்று பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குநர் பயால் க... மேலும் பார்க்க