செய்திகள் :

Diesel: "இந்த சினிமாவில நம்மள தூக்கிவிடுறத்துக்கு யாரும் இல்ல"- கண்கலங்கிய ரிஷி ரித்விக்

post image

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.

இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( அக்.14) நடைபெற்றிருக்கிறது.

டீசல் படத்தில்...
டீசல் படத்தில்...

இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரிஷி ரித்விக் பேசியபோது, " எனக்கு இந்தப் படத்துல நடிக்குற வாய்ப்பைக் கொடுத்த சண்முகம் (இயக்குநர்)அண்ணனுக்கு நன்றி.

எனக்கு சினிமாவில பெருசா பேக்ரவுண்ட் இல்ல. ஆனா எனக்கு ஒரு கூட பிறந்த அண்ணனா சப்போர்ட் பண்ணிருக்காரு.

அதுமட்டுமில்லாம இந்தப் படத்துல ஒரு நல்ல கேரக்டர் கொடுத்துருக்காரு. எனக்கு புடிச்ச மீனவ கேரக்டரையே கொடுத்துருக்காரு.

படப்பிடிப்பு தளத்தில நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்து கூடப் பிறந்த தம்பி மாதிரி பார்த்துக்கிட்டாரு.

இந்த சினிமாவில நம்மல தூக்கிவிடுறத்துக்கு யாரும் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்.

ரிஷி ரித்விக்
ரிஷி ரித்விக்

சண்முகம் அண்ணா இந்தப் படத்துல ஜெய்க்கணும். 25 வருஷமா அண்ணன் போராடிகிட்டே இருக்காரு.

அவரோட கஷ்டத்தை என்னைக்குமே வெளிய சொல்லிக்க மாட்டாரு. இந்தப் படத்துல அவர் ஜெயிச்சால் பலரோட குடும்பம் இங்க வாழும்" என்று கண்கலங்கியிருக்கிறார்.

Arasan: ``தனுஷை நடிக்க வைங்க சார்!" - திரையரங்குகளில் வெளியான `அரசன்' பட புரோமோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்' படத்தின் பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த `அரசன்' திரைப்படமும் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை' படத்தின் கதையுடன... மேலும் பார்க்க

Dhanush: ``படம் பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி" - அண்ணாமலைக்கு நன்றி சொன்ன நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்தப்படம் இட்லி கடை. இது அவர் இயக்கத்தில் வெளிவந்த 4-வது திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, இளவரச... மேலும் பார்க்க

Bison: "பா.ரஞ்சித் அரசியலுக்கு வருவாரா?"- மாரி செல்வராஜ் சொன்ன பதில்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்த... மேலும் பார்க்க

Bison: "நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து நான் எடுத்தப்படம் பைசன்தான்"- மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்த... மேலும் பார்க்க

'இன்பநிதியை வைத்து அடுத்தப் படம் எடுக்கிறாரா?'- மாரி செல்வராஜ் அளித்த விளக்கம்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்த... மேலும் பார்க்க

Bison: "அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்"- மாரி செல்வராஜ்