செய்திகள் :

Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: என் வயது 34. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த சில தினங்களாக உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருக்கிறது. அது மூலநோய் இல்லை என்பது உறுதி. டெயில்போன் வலியாக இருக்கலாம் என்கிறார்கள் நண்பர்கள். டெயில்போன் என்றால் என்ன.... அந்த வலி ஏன் வருகிறது... தவிர்க்க முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

நாம் உட்காரும்போது நம் உடலின் எடையானது பிட்டப்பகுதிகளில்தான் விழும். பிட்டப்பகுதிக்கு இடையில் ஓர் எலும்பு இருக்கும். அதற்கு 'காக்சிஸ்' (coccyx) அல்லது 'டெயில்போன்' (tailbone) என்று பெயர்.  

காக்சிஸ் எலும்பானது,  கடினமான பரப்பில் படும்போது ஒருவித வீக்கம் ஏற்படும். அதேபோல டூ வீலரில் செல்லும்போது, மேடு, பள்ளத்தில் வாகனம் ஏறி, இறங்கும்போது, அந்த எலும்பு அடிவாங்கலாம். சிலருக்கு வழுக்கி விழுவதன் மூலமும் அந்த எலும்பில் அடிபடலாம். படிக்கட்டுகளில் இறங்கும்போது, அந்த எலும்பில் சிலநேரங்களில் அடிபடலாம்.  அந்த எலும்பில் அழுத்தம் ஏற்படும்போது, வலி வரும். அந்த வலிக்கு 'காக்சிடீனியா' (Coccydynia) என்று பெயர்.

இந்த வலி வராமலிருக்க, நாம் உட்காரும் இடம் சரியானதாக இருக்க வேண்டும். அதாவது கடினமான பரப்பாக இல்லாமல், குஷன் போன்று இருக்க வேண்டும். இப்படி உட்கார்ந்து பழகியவர்களுக்கு டெயில்போன் வலி வர வாய்ப்பில்லை.

உட்காரும் இடத்தில் வலி: காரணமும், தீர்வும் என்ன?

ஒருவேளை வலி வந்துவிட்டால், அதற்கென்றே 'காக்சிஸ் குஷன்' (Coccyx Cushion) என பிரத்யேகமாகக் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். இன்று பலரும் கம்ப்யூட்டர் முன் 14 மணி நேரம், 16 மணி நேரமெல்லாம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் விளைவாக, அவர்களுக்கெல்லாம் டெயில்போனில் அழுத்தம் ஏற்பட்டு, வலி வரும் வாய்ப்பும் அதிகம்.

அவர்கள் சரியான நாற்காலிகளைப் (Ergonomic chairs) பயன்படுத்த  வேண்டும். காக்சிஸ் குஷன் பயன்படுத்துவது, டூ வீலர் ஓட்டும்போது மேடு, பள்ளங்களில் தூக்கித்தூக்கிப் போடாதபடி கவனமாகப் பார்த்து ஓட்டுவது போன்றவற்றின் மூலம் வலி வராமல் தடுக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம... மேலும் பார்க்க