செய்திகள் :

Doctor Vikatan: ஒரு மாதத்தில் எத்தனை கிலோ எடை குறையலாம், தினமும் எடையை செக் பண்ணலாமா?

post image

Doctor Vikatan: ஒரு மாதத்தில் இத்தனை கிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா... சிலர் ஒரே மாதத்தில் 10- 12 கிலோவெல்லாம் குறைத்ததாகச் சொல்கிறார்களே... அது சரியானதா... தினமும் உடல் எடையை சரிபார்க்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.  

ஷைனி சுரேந்திரன்

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 2 முதல் 2.5 கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதுதான் இயல்பானதும்கூட.  ஆர்வக் கோளாறில் ஒரே மாதத்தில் 10 கிலோ, 12 கிலோ எடையை எல்லாம் குறைக்க முயற்சி செய்வது ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குறுகிய காலத்தில் அளவுக்கதிமான எடைக்குறைப்பு என்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி, தசை இழப்பை ஏற்படுத்தும். தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து, உடல் ஆற்றலையும் குறைக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் ஆரம்பத்தில் ஒருவர் இழப்பதெல்லாம் உடலில் உள்ள தண்ணீரின் எடையைத்தான்.  அதன் பிறகு அவர் எடுத்துக்கொள்ளும் உணவு, அவற்றின் கலோரி ஆகியவற்றைப் பொறுத்துதான் தசை மற்றும் கொழுப்பு ஆகியவை குறையத் தொடங்கும்.

சில நாள்களில் ஹெவியான உணவுகளைச் சாப்பிட நேரிடும். அந்த உணவுகளில் உள்ள அதிகமான கார்போஹைட்ரேட் உடலில் நீர் சேர்வதை அதிகரிக்கும். இனிப்புகள், பழங்கள் என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கும். பலமாக உணவு உண்ட  அடுத்தநாளே எடையைச் சரிபார்ப்பது தவறு. எடையில் ஏற்பட்ட ஏற்றம் அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் குறையும். 

விசேஷங்கள், விருந்துகள் வரப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தால், உடற்பயிற்சிகளைத் தவறவிடாமல் செய்ய வேண்டியது முக்கியம். வெளியில் சாப்பிடப் போவது தெரிந்தால் அன்றைய தினம் சற்று அதிகம் வொர்க் அவுட் செய்யலாம். அடுத்தவேளை சாப்பிடும்போது ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல்நாள் இரவு பலமான விருந்து சாப்பிட்டிருந்தால், அடுத்த நாள் காலையில் காபியோ, கிரீன் டீயோ குடித்துவிட்டு, காலை உணவைத் தவிர்த்து விடலாம். கொஞ்சமாக சாதம், பருப்பு மற்றும் காய்கறிகளுடன் நேரடியாக மதிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

15 நாள்களுக்கொரு முறை எடை பார்த்தால் போதும். இன்ச் டேப் பயன்படுத்தி மார்பளவு, இடுப்பு, வயிறு மற்றும் தொடைப்பகுதிகளையும் அளந்து பாருங்கள். தினமும் எடையை செக் செய்ய வேண்டியதில்லை. மாதவிலக்கு நாள்களிலும் உடல் எடையில் ஏற்றம் இருக்கலாம் என்பதால் அப்போதும் அதை சரிபார்க்கத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: உப்பும் சர்க்கரையும் அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதா?

Doctor Vikatan:சர்க்கரையையும் உப்பையும் அறவே தவிர்த்த உணவுகள் ஆரோக்கியமானவையா? இவை இரண்டும் உடலுக்குத் தேவையில்லையா? சர்க்கரையோ, உப்போ இல்லாத உணவுகளை உண்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?பதில் சொல்கி... மேலும் பார்க்க

Canada: ``கனடாவின் அடுத்தப் பிரதமர்?" - ரேஸில் முன்னணியில் இருக்கும் அனிதா ஆனந்த! - யார் இவர்?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அடுத்தப்... மேலும் பார்க்க

Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்!

சைவ உணவு பிரியரோ அல்லது அசைவ உணவு பிரியரோ இரண்டு வகையினருமே விரும்பி உண்ணும் ஓர் உணவாக இருக்கிறது காளான்(Mushroom). பெரியவர்கள் சிறியவர்கள்வரை விரும்பி உண்ணும் காளானில் ருசியுடன் சேர்ந்து உடலுக்குத் த... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார் அந்த விவசாயி?

``என் உயிரை விட விவசாயிகளோட வாழ்க்கை தான் முக்கியம்..." இப்படி அவர் கடந்த சனிக்கிழமை உரையாற்றும்போது அவர் உண்ணாவிரதம் தொடங்கி 41 நாள்கள் முடிந்திருந்தது.'விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பலரையும் பாதிக்கும் Brain Aneurysm... மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா தலைவலி?

Doctor Vikatan: சமீப காலமாக Brain Aneurysm குறித்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, காய்ச்சல் அறிகுறியுடன்மருத்துவமனையில் சேருவதாகவும், மருத்துவப் பரிசோதனையில் ... மேலும் பார்க்க

Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா பின்னணி என்ன?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ம் ஆண்டு தன் லிபரல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அப்போது அவருக்கு வயது 43. அரசியலில் புதிய முகம், இளம் தலைவர், வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ப... மேலும் பார்க்க