செய்திகள் :

Doctor Vikatan: குடும்ப பின்னணியில் நீரிழிவு இல்லாதபோதும், கர்ப்ப காலத்தில் டயாபட்டீஸ் வருவது ஏன்?

post image

Doctor Vikatan: என் வயது 32. எங்கள் குடும்பத்தில் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, புகுந்த வீட்டுப் பக்கமும் சரி, யாருக்கும் டயாபட்டீஸ் இல்லை. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு டயாபட்டீஸ் வந்தது. அது குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம், தானாகச் சரியாகிவிடும் என்று சொன்னார் மருத்துவர். குடும்ப பின்னணியில் டயாபட்டீஸ் இல்லாதபோதும் சிலருக்கு இப்படி கர்ப்ப காலத்தில் அந்த பாதிப்பு வர என்ன காரணம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்


கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவை 'ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ்' (gestational diabetes ) என்கிறோம்.  வழக்கமாக இது கர்ப்பத்தின் 5 அல்லது 6-வது மாதங்களில் வரும். 

கர்ப்பகால நீரிழிவுக்கு முக்கிய காரணமே, கர்ப்பத்தின் போது அந்தப் பெண்ணின் உடல் எடை அளவுக்கதிகமாக அதிகரிப்பதுதான். உயரத்துக்கேற்ற எடை இருக்கிறதா என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ (BMI) அளவு சராசரியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கர்ப்பிணிக்கு நீரிழிவு வரும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பகால நீரிழிவு வந்தால் அது தானாக சரியாகிவிடும் என்ற அலட்சியம் வேண்டாம். மற்ற கர்ப்பிணிகளைவிடவும் இவர்கள் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.

குழந்தையின் உடல் எடையும் அதிகரிக்கலாம். குழந்தையின் உடல் எடை அதிரிக்க, அதிகரிக்க, சுகப்பிரசவ வாய்ப்புகள் குறைந்து, சிசேரியன் செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும்.

குழந்தையின் உடல் எடை அதிரிக்க, அதிகரிக்க, சுகப்பிரசவ வாய்ப்புகள் குறைந்து, சிசேரியன் செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தால், அந்தப் பெண்ணுக்கு பிற்காலத்தில் நீரிழிவு பாதிப்பதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் உண்டு.  அதாவது எல்லாப் பெண்களுக்கும் பிரசவமானதும் அந்தத் தற்காலிக நீரிழிவு சரியாகிவிடுவதில்லை. சிலருக்கு அது நிரந்தரமாகவும் மாறலாம். எனவே,  கர்ப்பகால நீரிழிவு என்பதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு அவர்கள் வருடந்தோறும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்க்க வேண்டும்.

பிரசவமானதும் நீரிழிவு சரியானதாக நினைத்துக்கொண்டு அலட்சியமாக இல்லாமல், உடல் எடையைச் சரியாக வைத்துக்கொள்வது, சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி என எல்லாவற்றிலும் அப்போதிலிருந்தே அக்கறை செலுத்த வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

டெஸ்ட் டியூப் பேபி எப்படி உருவாகிறது தெரியுமா?முக்கியமான 5 விஷயங்கள்! | பூப்பு முதல் மூப்புவரை

டெஸ்ட் டியூப் பேபி என்றவுடன், நம் அனைவருக்கும் பொதுவாக நினைவில் வருவது, வட்டமான கருமுட்டையை ஒருபக்கம் கருவி ஒன்று தாங்கி நிற்க, மறுபக்கம் அந்தக் கருமுட்டையை ஓர் ஊசி துளைத்து, அதன் குழாய் வழியாக விந்தண... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரேக்அப் ஆன காதல்; நிச்சயமான திருமணம்... வெஜைனாவுக்கான சர்ஜரி அவசியமா?

Doctor Vikatan: என்தோழிக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவளுக்கு இதற்குமுன் காதல் அனுபவமும், அந்தக் காதலருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட அனுபவமும்இருக்கிறது. எதிர்பாராத விதமாக அ... மேலும் பார்க்க

IVF சிகிச்சையில் குழந்தைக் கனவு நனவாகுமா..? | பூப்பு முதல் மூப்புவரை

"திருமணமாகி 10 ஆண்டுகளாகிவிட்டன. இருமுறை கருத்தரித்தபோதும் இருமுறையும் உயிருக்கே ஆபத்தான எக்டோபிக் எனும் சினைக்குழாய் கர்ப்பம் என்பதால், இருமுறையும் அறுவை சிகிச்சை, இனி இயல்பாக கருத்தரிக்கவே இயலாத நில... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு: வெற்றி வாய்ப்பு எவ்வளவு; எத்தனை முறை முயற்சிக்கலாம்? | பூப்பு முதல் மூப்புவரை

செயற்கை கருத்தரிப்பு முறைகளில் முதலாவதும் முக்கியமானதுமான, 'Intra Uterine Insemination' எனும் செயற்கை விந்தூட்டல் அல்லது செயற்கை விந்தேற்றல் முறை பற்றி இன்று தெரிந்துகொள்வோம். அதற்குமுன், வரலாற்றின் ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திரை கொடுக்கலாமா?

Doctor Vikatan: என்மகளுக்கு24 வயதாகிறது. பூப்பெய்தியதுமுதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். இந்நிலையில் திடீரென ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் வலி; வெளியேறாத ப்ளீடிங்.. விசித்திர பிரச்னைக்கு தீர்வு என்ன?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் மகளுக்கு 12 வயதாகிறது. அவள் இன்னும் பூப்பெய்தவில்லை. ஆனால், மாதந்தோறும் அவளுக்கு பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படுவது போன்ற வலி ஏற்படவே, அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம... மேலும் பார்க்க