செய்திகள் :

Doctor Vikatan: பதின்ம வயதுப் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி உடல் எடையைக் கூட்டுமா?

post image

Doctor Vikatan: பெண் குழந்தைகளுக்கு, குறிப்பாக டீன்ஏஜில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி கொடுப்பது மிகவும் நல்லது என்று நிறைய தகவல்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இயற்கை மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும்கூட அதைப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், உளுந்தங்களி கொடுத்தால் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் என சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை
மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

உளுத்தங்களி என்பது ஆகச் சிறந்த புரத உணவு என்பதில் சந்தேகமே இல்லை. கிராமப் புறங்களில் உளுந்தங்களி என்பது தவிர்க்க முடியாத ஓர் உணவாக இருக்கிறது. நகரத்தில் வசிப்போருக்கு அதன் அருமை தெரிவதில்லை.

அடிக்கடி உளுந்தங்களி சாப்பிடுவதால், பெண்களின் மாதவிடாய் காலப் பிரச்னைகள் சரியாகும். குறிப்பாக, பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் இடுப்புவலி, உடல் வலியைக் குறைத்து எனர்ஜியைக் கொடுக்கும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடல் அளவுக்கு அதிகமாக களைத்துச் சோர்ந்து போயிருக்கும். அந்த உடலுக்கு மீண்டும் வலிமையைக் கொடுக்கவல்லது உளுத்தங்களி. கர்ப்பப்பையை பலப்படுத்துவதிலும் உளுத்தங்களிக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

இன்று உடலில் எனர்ஜியே இல்லை என எனர்ஜி டிரிங்க், எனர்ஜி பார் என எதை எதையோ வாங்கிச் சாப்பிடுகிறார்கள். செயற்கையான இத்தகைய உணவுகளை நாடுவதற்கு பதில், இயற்கையான பவர்ஹவுஸ், எனர்ஜி பூஸ்டரான உளுந்தங்களி போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

கர்ப்பப்பையை பலப்படுத்துவதிலும் உளுத்தங்களிக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
கர்ப்பப்பையை பலப்படுத்துவதிலும் உளுத்தங்களிக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

உளுந்தங்களியில் உள்ள அபரிமிதமான இரும்புச்சத்து, அனீமியா எனப்படும் ரத்தச்சோகையைக் குறைக்கும். இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இரண்டும் எலும்புகளை வலிமையாக்கும்.

உளுந்தங்களியில் புரதச்சத்தும் ஊட்டச்சத்துகளும் அதிகம் என்பதால், பூப்பெய்தும் வயதிலுள்ள பெண்களுக்குக் கொடுக்கும்போது அவர்களது வளர்ச்சிக்கு உதவும். இத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும், உளுத்தங்களி என்பது கலோரிகள் அதிகமுள்ள உணவு என்பதில் சந்தேகமில்லை.

எனவே, இதை அளவுக்கதிகமாகவும் அடிக்கடியும் கொடுத்தால் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இதில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய், நெய், இனிப்பு போன்றவற்றின் அளவிலும் கவனம் வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

உணவுக்குப் பிறகு பாதித்த உடல்நிலை - பிரமோஸ் ஏவுகணை திட்ட பொறியாளர் 30 வயதில் திடீர் மரணம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பொறியாளர் ஆகாஷ்தீப் குப்தா மரணமடைந்துள்ளார்.30 வயதான ஆகாஷ்தீப் குப்தா,... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஓவர்நைட் ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் காம்போ - ஆரோக்கியமான காலை உணவா?

Doctor Vikatan: நான்தினமும் இரவில் ஆர்கானிக் ஓட்ஸ், சியா சீட்ஸ் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில்ஊறவைத்துவிட்டு, மறுநாளுக்கு காலை உணவாக எடுத்துக்கொள்கிறேன். காலையில் அத்துடன் சிறிது தேனும் கல... மேலும் பார்க்க

Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையும் தள்ளி வைக்கலாம்!

பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அதைப் பற்றி பேசுவதற்கு பெண்கள் கூச்சப்படுவதாலும், இன்று மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்' சீரியஸ் பிரச்னையா?

Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி 'லாக்' ஆகிவிட்டதாக... மேலும் பார்க்க

இந்த சிம்பிள் டிப்ஸ் மழைக்காலத்துல நம்மை ஆரோக்கியமா வெச்சுக்கும்!

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், காய்ச்சல் போன்ற தொல்லைகள் வருவது இயல்பே. இந்தப் பிரச்னைகளுக்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியிலேயே மர... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை காட்டிக்கொடுக்கும் ட்ரோபோனின் டெஸ்ட்; 40 ப்ளஸ்ஸில் அவசியமா?

Doctor Vikatan: நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவோருக்குச்செய்யப்படுகிற ட்ரோபோனின் டெஸ்ட் பற்றி சமீபத்தில் இந்தப் பகுதியில் விளக்கியிருந்தீர்கள். 40 வயது தாண்டிய அனைவருமேஇதயநலனைத் தெரிந்துகொள்ள ட்ரோபோனின் ... மேலும் பார்க்க