செய்திகள் :

Doctor Vikatan: மன அழுத்தம், மனப் பதற்றம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க டெஸ்ட் உள்ளதா?

post image

Doctor Vikatan: சாதாரண வருத்தம் தொடங்கி, மன அழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் பிரச்னைகள் பலருக்கும் இருக்கின்றன. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவோ, குணப்படுத்தவோ மருத்துவ சிகிச்சைகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்

மன வருத்தம், மனப் பதற்றம், மனக் குழப்பம்,  பரபரப்பு என மனநலம் தொடர்பான பிரச்னைகள் பலவிதம். இவற்றை அறிகுறிகளை வைத்து மட்டும்தான் கண்டறிய முடியும்.

ரத்தப் பரிசோதனை, எக்ஸ் ரே, ஸ்கேன்  மாதிரி எந்தச் சோதனையிலும் கண்டுபிடிக்கவே முடியாது. நியூரோகெமிக்கல் சமநிலையின்மையே (Neurochemical Imbalance) இதற்கான முக்கிய காரணம்.

நியூரோகெமிக்கல் சமநிலையின்மை என்பது, நமது மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு (நியூரான்கள்) இடையே தகவல்களைக் கடத்தும் வேதிப்பொருள்களின் (Chemical Messengers) அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறிக்கிறது.

இந்த வேதிப்பொருள்களை நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) என்று அழைக்கிறோம்.  

மனதை வாட்டும் அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்னைகளை வேறுவிதமாக அணுகலாம். குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

சிரித்துக்கொண்டும், பேசிக் கொண்டும், துள்ளிக்கொண்டும் இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. ஆனால், அதைக் கட்டுப்படுத்தி, ஒரே இடத்தில் உட்கார வைத்து, பிஞ்சிலேயே மன அழுத்தத்துக்கான விதையை ஊன்றுகிறோம்.

குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் பெரியவர்களுக்கு உடற்பயிற்சி. இவற்றின் மூலம்தான் மூளையின் நியூரோகெமிக்கல் சமநிலையின்மையை சரிப்படுத்த முடியும்.

குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

பழங்கள் சாப்பிடுவதை எல்லோரும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். பழங்களில் 'ஃபீல் குட் ஃபேக்டர்ஸ்' எனச் சொல்லப்படுகிற செரட்டோனின் போன்ற கெமிக்கல்கள் உள்ளன. அவை மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுத்தும்.

மனிதனை சமூக விலங்கு என்றே சொல்கிறோம். அவனைச் சுற்றி நிறைய உறவுகளும் நட்புகளும் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் கலந்து பேசி, பழகும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

வெயில் படாத பகுதியிலேயே இருப்போருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. வெயில் வெளிச்சம் தொடர்ந்து பட்டுக்கொண்டிருந்தாலே மன அழுத்தம் பாதியாகக் குறையும்.

கட்டுப்படுத்த முடியாத மன அழுத்தம் என்றால் மனநல மருத்துவரை அணுகி கவுன்சலிங்கும், தேவைப்பட்டால் மருந்துகளும் எடுத்துக்கொள்ளலாம்.  

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

இத்தனை நன்மைகள் செய்யுமா நீவுதல் சிகிச்சை? விளக்கும் இயற்கை மருத்துவர்!

’’வெகுஜன வழக்கில் நீவுதல் சிகிச்சையானது `மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே நீவுதல் சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது. மெசபடோமியர்கள் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தியிருக்கின... மேலும் பார்க்க

Doctor Vikatan: `ஆயுத பூஜைக்கு அரிசிப் பொரி' - வெயிட்லாஸுக்கு உதவுமா, இதன் நன்மைகள் என்ன?

Doctor Vikatan: ஆயுத பூஜைக்கு வீடு நிறைய அரிசிப்பொரி நிறையும். அதைச் சாப்பிடுவதால் ஆரோக்கியப் பலன்கள் ஏதும் உண்டா... அரிசிப் பொரி சாப்பிட்டால் வெயிட்லாஸ்முயற்சி எளிதாகுமா, அதை எப்படியெல்லாம் சாப்பிடலா... மேலும் பார்க்க

மார்பக ஆரோக்கியம்; எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

மார்பகங்கள் வெறும் அழகுக்கான அடையாளம் கிடையாது. அவை ஆரோக்கியத்துக்கான காரணியும்கூட.மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan:சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது?-ராஜா, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' - பரிந்துரை செய்யும் நிபுணர்

''பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படு... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத்தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்துவந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத்தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்கு... மேலும் பார்க்க