செய்திகள் :

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?

post image

Doctor Vikatan: எனக்கு வயது 50. பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை இருப்பதால் கர்ப்பப்பையை அகற்றிவிடும்படி சொல்கிறார் மருத்துவர். எனக்குத் தெரிந்த சிலர், கர்ப்பப்பை அறுவை சிகிச்சையைச் செய்துகொண்ட பிறகு எக்கச்சக்கமாக உடல் எடை அதிகரித்திருக்கிறார்கள். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டால், உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்கவே முடியாது என்று சொல்லப்படுவது உண்மையா... அதைத் தவிர்க்க முடியுமா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

கர்ப்பப்பையை நீக்கும் 'ஹிஸ்டெரெக்டமி' (hysterectomy) அறுவை சிகிச்சையானது, ப்ளீடிங் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களுக்காகச் செய்யப்படலாம்.

பொதுவாகவே, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்குமோ என்ற  பயம் பலருக்கும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.  கர்ப்பப்பையை நீக்கும்போது, சிலருக்கு ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் சேர்த்து நீக்கிவிடுவார்கள். சினைப்பைகளை நீக்கிவிட்டால், ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு இருக்காது. அதன் விளைவாக கால்சியம் குறைபாடு ஏற்படும்.

ஆஸ்டியோபொரோசிஸ் (osteoporosis) எனப்படும் பாதிப்பு வரும். இதில், எலும்புகள் ஸ்பான்ஜ் போல மென்மையாக மாறி, வலுவிழக்கும். அதனால்தான் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட எல்லாப் பெண்களையும், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார்.

ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும்.  அதைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் இயக்கம் என்பது குறையத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாகவே சிலருக்கு உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும்.

முன்பெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை வயிற்றைக் கிழித்து ஓப்பன் சர்ஜரி முறையில்தான் அதிகம் செய்தார்கள். அந்த ஆபரேஷனுக்கு பிறகு மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படும். அதனாலும் அந்தப் பெண்களின் உடல் இயக்கம் குறையும். உடல் எடை அதிகரிக்கும்.  அப்படியானால், கர்ப்பப்பை நீக்க ஆபரேஷன் செய்துகொள்கிற எல்லோருக்குமே உடல் எடை அதிகரிக்குமா என்றால் நிச்சயம் இல்லை.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் அறிவுரைக்கேற்ப கால்சியம் சப்ளிமென்ட்டுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால், எடை கூடாது. இப்போதெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை லேப்ராஸ்கோப்பி முறையில் செய்துவிடுகிறார்கள். இந்த முறையில் ஆபரேஷன் செய்யும்போது, விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். உடற்பயிற்சிகளையும் செய்ய முடியும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் விடாமல் தொடரும் வறட்டு இருமல்.. கருவை பாதிக்குமா?

Doctor Vikatan:என் தங்கைக்கு 30 வயதாகிறது. 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவளுக்குதீவிரமான இருமல் ஏற்பட்டது. வறட்டு இருமல்தான்... ஆனால், ஒருநாள்முழுவதும் இருந்தது. இருமும்ப... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு: `சூப்பர் ஓவுலேஷன் சிகிச்சை' என்றால் என்ன?; யாருக்கு தேவைப்படும்?

"சூப்பர்..!"இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை அர்த்தங்களை, எத்தனை நம்பிக்கைகளை எவ்வளவு நிறைவை, எவ்வளவு மனமகிழ்வைத் தருகிறது.! இதே வார்த்தையை, அதிக அர்த்தம் நிறைந்த, அத்துடன் நம்பிக்கையையும் மனநிறைவையும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில்தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்காது என்கிறாள் என் தோழி. வெளிநாட்டில் வசிக்கிறஅவள், கருத்தரிப்பதைத் தவிர்க்க, அங்கெல்லாம் இந்த முறையைப் பின்பற்றுவதாகச்சொல்கிற... மேலும் பார்க்க

Doctor Vikatan: சிசேரியனுக்குப் பிறகு மலச்சிக்கல், வாயு பிரச்னை.. காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த சில நாள்களுக்குமுன்புதான் சிசேரியன் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்தது. அதிலிருந்து அவளுக்கு மலச்சிக்கல் பிரச்னையும், அதிகப்படியான வாயு வெளியேறும் பிரச்னையும்ஆரம்ப... மேலும் பார்க்க

Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய்லாந்து மாணவி சாதனை

இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக பீரியட்ஸின்போதுஅதிகமாக ப்ளீடிங் ஆகிறது. இதனால்எனக்கு ரத்தச்சோகையும் வந்துவிட்டது. மருத்துவரை அணுகினால், குழந்தை பெற்றுவிட்டதால், இனி கர்ப்பப்ப... மேலும் பார்க்க