Genelia: "எல்லோரும் நம் Best Friends கிடையாது" - ஜெனிலியாவின் ஃப்ரண்ட்ஷிப் சீக்ரெட்!
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜெனிலியா, நட்பு வட்டம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நட்பு என்பது அனைவரையும் நம் சுற்றத்துக்குள் அனுமதிப்பது அல்ல எனக் கூறியுள்ளார்.

Genelia சொன்னதென்ன?
"தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை வரையறுத்துள்ள ஜெனிலியா, "ஒரு கையளவு நண்பர்களிடம் மட்டுமே நான் சோகமாக இருக்கும்போது அல்லது கோபமாக இருக்கும்போது பேசுவேன். ஏனென்றால் எல்லோராலும் உங்கள் பிரச்னைகளை சரிசெய்ய முடியும் என நினைக்கவில்லை" எனக் கூறியிருக்கிறார்.
"நான் எல்லோரும் உங்கள் 'Best Friend' என்றும் நினைக்கவில்லை. நான் ஒரு ப்ஃரெண்ட்லியான ஆள், என்னால் எல்லோருடனும் பேச முடியும்... ஆனால் நாம் நண்பர்கள் அல்ல தெரிந்தவர்கள் என்ற உண்மையை நான் தெளிவாக வைத்திருக்கிறேன். நாம் இன்றைய தினத்தை ஒரு சிறந்தநாளாக ஆக்குகிறோம். அதற்காக நாம் 'Best Friends' ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருவருடன் அதிக நேரம் அல்லது மகிழ்ச்சியான நேரம் செலவிடுவது நெருங்கிய நண்பராக மாற்றாது எனக் கூறும் ஜெனிலியா, அவரது Best Friend-க்கான இலக்கணம் பற்றி, "நான் ஒருவரை முழுமையாக என் வாழ்க்கைக்குள் அனுமதிக்கும் வரை அவரை என் Best Friend என அழைக்க மாட்டேன். இதில் தெளிவாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.