செய்திகள் :

Ilaiyaraaja: `நான் வருகிறேன்'- எந்தெந்த ஊர்களில் இசைக் கச்சேரி? - அப்டேட் கொடுத்த இளையராஜா

post image
அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற அறிவிப்பை இளையராஜா அறிவித்திருக்கிறார்.

இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்திருந்தாலும் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இசைகச்சேரி நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் இசைக்கச்சேரியை நேரில் பார்த்து மகிழ்ந்திருந்தனர்.

இளையராஜா
இளையராஜா

"நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..? என்று தனது எக்ஸ் தளத்தில் இளையராஜா பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை இளையராஜா வெளியிட்டிருக்கிறார். " சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்… உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்!

தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்திருக்கிறார். விரைவில் அவர் அறிவித்துள்ள மாவட்டங்களில் எந்த தேதிகளில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

Sk: "அப்பா, இன்னைக்கு நான் படிச்ச பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்..." - சிவகார்த்திகேயன் உருக்கம்

சுதாகொங்கராவின் 'பராசக்தி' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படித்த திருச்சி தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அப்போது த... மேலும் பார்க்க

Idly Kadai: தனுஷுடன் அருண் விஜய் - பரபர தனுஷ் பட அப்டேட்ஸ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிற `இட்லி கடை' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.அதே நாளில் அஜித் நடித்துள்ள `குட் பேட் அக்லி' திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. நடிப்பை தாண்டி இயக்கத்தில் தனுஷ் பர... மேலும் பார்க்க

’கதைகூட கேட்காம விஜயகாந்த் சாரை கமிட் செய்து கொடுத்தார் வி.நடராஜன் சார்' - உருகும் ஆர்.வி.உதயகுமார்

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'முள்ளும் மலரும்', பிரபு நடிப்பில் 'கலியுகம்', 'உத்தம புருஷன்', 'தர்மசீலன்', 'ராஜா கைய வச்சா', 'தர்மசீலன்', ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'சின்ன கவ... மேலும் பார்க்க

இயக்குநர் மகேந்திரனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் வி.நடராஜன் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

உடல்நலக் குறைவால் தயாரிப்பாளர் `ஆனந்தி ஃபிலிம்ஸ்' நடராஜன் காலமானார்.ரஜினி - மகேந்திரன் கூட்டணியில் உருவான `முள்ளும் மலரும்', பிரபுவின் `உத்தம புருஷன்', `ராஜா கைய வச்சா', `தர்ம சீலன்', சத்யராஜ் நடித்த ... மேலும் பார்க்க

Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்னா பாலசந்திரன்

நக்கலைட்ஸ் யூட்யூப் சானலின் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குடும்பஸ்தன்'.கல்யாண வாழ்க்கைய... மேலும் பார்க்க