குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!
IPL 2025: நெருங்கும் ஐபிஎல் தொடர்; பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்! - வெளியான தகவல் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் நான்குப் போட்டிகளில் பும்ரா சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். ஆனால் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அதனால் அந்தத் தொடரின் ஐந்தாவது போட்டியில் அவரால் பங்கேற்கவில்லை.
அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்விலிருந்து வரும் பும்ரா 2025 ஐபிஎல் தொடருக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட ஐந்து போட்டிகளை இழக்க வாய்ப்பு உள்ளது.

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா துவக்க போட்டிகளில் விளையாடாதது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளாக பார்க்கப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...