செய்திகள் :

Iran - Israel: ``நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது..'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

post image

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 7-வது நாளை அடைந்திருக்கிறது.

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி, நேற்று ஒரு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, ``அமெரிக்க அழுத்தத்திற்கு சரணடைய மாட்டேன். அதே நேரம் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான சேதத்தை சந்திக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஈரான் சரணடையாது" என்றார்.

ஈரான் நடான்ஸ் அணுசக்தி நிலையம்
ஈரான் நடான்ஸ் அணுசக்தி நிலையம்

இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இணையுமா என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``நான் இணையலாம் இணையாமலும் இருக்கலாம். அதாவது நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலால் ஈரானிய அரசு சரிந்துவிடுமா என்றால்... நிச்சயமாக, எதுவும் நடக்கலாம். ஆனால், ஈரானின் ஃபோர்டோ அணு நிலையத்தை அழிக்கும் திறன் கொண்டவர்கள் நாங்கள் மட்டுமே. அத்னால் நான் அதைச் செய்யப் போகிறேன் என்று அர்த்தமல்ல" என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தெளிவில்லாமல் பூடகமாகவே பதிலளித்திருக்கிறார்.

இதற்கிடையில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர்கள் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக நாளை ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியைச் சந்திக்க உள்ளனர்.

மகாராஷ்டிரா: ``5-ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்; இந்தி படிப்பது..'' - பட்னாவிஸ் சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று மாநில அரசு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களுக்கு இது க... மேலும் பார்க்க

Oarfish: வலையில் சிக்கிய துடுப்பு மீன்; பேரழிவுக்கான அறிகுறியா? - ஆராய்ச்சியாளர் பதில் |Explained

துடுப்பு மீன் - இந்த மீன் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கரை ஒதுங்குகின்றன.,. வலையில் சிக்குகின்றன. 'இதில் என்ன பிரமாதம்?' என்பது தானே உங்களது கேள்வி. இந்த மீன் கரை ஒதுங்கினால் உலகில் ஏதேனும் அசம்பா... மேலும் பார்க்க

`ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' -உசுப்பேற்றிய பாக்., ராணுவ தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

மீண்டும் மீண்டும் இந்தியா மறுத்தும், 'நான் தான் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வைத்தேன்' என்று கூறி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று நடந்த இந்திய பிரதமர் மோடி ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புதின்; ட்ரம்ப் கேட்ட உதவி - அமெரிக்கா, ரஷ்யா முரண்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடங்கி ஆறு நாள்கள் ஆகிறது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் விட்டுக்க... மேலும் பார்க்க

``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - மீண்டும் ட்ரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தா... மேலும் பார்க்க

``கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' - திருச்சி சிவா

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி மாநிலச்செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் தி... மேலும் பார்க்க