செய்திகள் :

Israel: ``இஸ்ரேல் நமக்காக மிக மோசமான செயலை செய்கிறது" - ஈரானை எதிர்க்கும் ஜெர்மன் சான்சிலர்

post image

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Chancellor பிரீட்ரிக் மெர்ஸ் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``இஸ்ரேல் நம் அனைவருக்காகவும் மிக மோசமான வேலை செய்கிறது. ஈரான் ஆட்சியால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்தான். இந்த முல்லா ஆட்சி உலகிற்கு மரணத்தையும் அழிவையும் கொண்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களில் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் தலைமை பலவீனமடைந்துள்ளது.

German Chancellor Friedrich Merz
German Chancellor Friedrich Merz

அதன் முந்தைய பலத்துக்கும், வலிமைக்கும் ஈரான் திரும்புவது கடினம்தான். அதனால், ஈரானின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. நாம் காத்திருந்து அதைப் பார்க்கலாம். ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முழுமையான அழிவைச் சந்திக்க நேரிடும்.

ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை அழிப்பதற்கான இராணுவத் திறன் இஸ்ரேலிடம் இல்லை என்றாலும், அமெரிக்காவிடம் இருக்கிறது. எனவே, இனி ஒரு மாற்றம் ஏற்பட்டால், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் வழக்கத்தைப்போல் மீண்டும் இராஜதந்திர உதவியை வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்க... மேலும் பார்க்க

Meta: ``வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்" - ஈரானின் முடிவும் மெட்டாவின் பதிலும்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.த... மேலும் பார்க்க

Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலி... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது' - திருமா உடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன்

விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் கேட்டப்போது, "அதிமுக முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க

'மக்களை உளவு பார்க்கிறதா வாட்ஸ்ஆப்?' குற்றம்சாட்டும் ஈரான் - வாட்ஸ்ஆப்பின் ரியாக்‌ஷன் என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு அதன் குடிமக்களிடம் வாட்ஸ்ஆப்பை அவர்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து டெலீட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் அர... மேலும் பார்க்க