Kabilan: கவிஞர் கபிலன் வழங்கும் தூரிகை கவிதை விருது - விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பாடலாசிரியர் கபிலனின் தூரிகை அறக்கட்டளை இந்தாண்டுக்கான கவிதை விருது விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
இலக்கிய அறிவைப் போற்றும் வகையில் 2024-ம் ஆண்டுக்கான தூரிகை கவிதை விருதை நடத்தவிருக்கிறது கபிலனின் தூரிகை அறக்கட்டளை. இந்த விருதை வெல்லவிருக்கும் ஆண் மற்றும் பெண் கவிஞர் என இருவருக்கு தலா ரூ 25,000 வீதம் ரூ. 50, 000 தொகையும் வழங்கவிருக்கிறார்கள். இந்த விருது விழாவுக்கு விண்ணப்பவர்களுக்கு சில விதிமுறைகளையும் அறிவித்திருக்கிறது தூரிகை அறக்கட்டளை. அதில், ``சமூகப் பண்பாட்டு மாற்றத்திற்கான நவீனக் கவிதை நூல்கள் அழைக்கப்படுகின்றன. 2024 ல் வெளிவந்த முதல் பதிப்பாக இருக்க வேண்டும்." என சில விதிமுறைகளை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மார்ச் மாதம் 20-ம் தேதியே விருதுக்கான கவிதை நூல்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள். இதனை தொடர்ந்து விருது விழா மே மாதம் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. கவிதை நூல்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம் எனவும் மேலும் தகவலுக்கு `93840 21339' என்ற தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
முகவரி: `தூரிகை அறக்கட்டளை, H92, திருப்பூர் குமரன் தெரு, எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம், சென்னை 600106' .