செய்திகள் :

karnataka: `அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு' - காவல் நிலையத்துக்கு பேரணியாக சென்ற மாணவ, மாணவிகள்

post image

கர்நாடகாவில் அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு, உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவற்றால் பள்ளி முதல்வருக்கெதிராக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்துக்குப் பேரணியாகச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த சம்பவமானது பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்திருக்கிறது.

பள்ளி முதல்வர் கீதா கபாஸுக்கு எதிராகப் பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர், சிறுமிகள் நவநகர் காவல் நிலையத்துக்கு பேரணியாகச் சென்றனர்.

இப்பேரணியில் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்களும் இணைந்துகொண்டனர்.

இதில், கீதா கபாஸை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், கிராம மக்களும், பள்ளியில் சுத்தமான குடிநீர் இல்லை, வகுப்பறைகளில் சரியான காற்றோட்ட வசதி இல்லை, கழிப்பறைகளில் போதுமான சுகாதாரம் இல்லை, மதிய உணவுத் திட்டத்தில் முட்டை மற்றும் வாழைப்பழங்கள் விநியோகத்தில் முறைகேடு எனக் கூடுதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

கர்நாடகா - அரசுப் பள்ளி - சாதி பாகுபாடு
கர்நாடகா - அரசுப் பள்ளி - சாதி பாகுபாடு

குறிப்பாகப் பள்ளி மாணவி, "கழிவறைகள் முறையான பராமரிப்பில்லாமல் மோசமாக இருக்கின்றன. வகுப்பில் மின்விசிறிகள், மின்விளக்குகள் இயக்கக் கேட்டால் ஆசிரியர்கள் எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

நாங்கள் மதிய உணவை எடுக்க சமையலறைக்குச் செல்லும்போது சமையலறை ஊழியர்கள் திட்டுகின்றனர்.

சாதி அடிப்படையில் எங்களிடம் பாகுபாடு காட்டுகிறார்கள். ஒரு ஆசிரியர் என்னிடம், `உன் தலையில் செருப்புடன் நடக்க வைப்பேன்' எனத் திட்டினார்" என்று புகார்களை அடுக்கினார்.

பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்ததும் நிலைமையைச் சரிசெய்ய பள்ளி வளாகத்துக்கு விரைந்த வட்டாரக் கல்வி அதிகாரி எம்.எஸ். படாதானி, "முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார்.

Kerala: ``பள்ளி கடைசி பெஞ்ச் மாணவர்கள் முறையை ஒழிக்க நிபுணர் குழு'' - கேரள அமைச்சர் சொல்வதென்ன?

பள்ளி வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவதாக கூறி அனைத்து மாணவர்களுமே முதல் பெஞ்ச் மாணவர்களாக மாற்ற 'ப' வடிவிலான வகுப்பறை ஏற்படுத்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதற்கு ஆதரவு ... மேலும் பார்க்க

Neet: "என் மகளுக்குத்தான் அத்தனை பெருமையும் சேரும்" - 49 வயதில் மருத்துவ கனவை நிறைவேற்றிய அமுதவள்ளி

பிளஸ்2 முடித்து 30 ஆண்டுகள் கழித்து தனது மகள் நீட் தேர்விற்குத் தயாராகும் போது அவருடன் சேர்ந்து ஆறு மாதங்களாக நீட் தேர்வுக்குத் தயாராகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த 49 வயதானஅமுதவள்ளி. இவர் தற்போது... மேலும் பார்க்க

திருச்சுழி: ``எங்க ஊரில் முதல் MBBS'' -விறகு வெட்டி மகளை படிக்க வைத்த தாய்; மகிழ்ச்சியில் ஊர் மக்கள்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துபாண்டி - பொன்னழகு, தம்பதியருக்கு 1 பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்... மேலும் பார்க்க