செய்திகள் :

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

post image

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவும் மும்பையும் மோதின. மற்றொன்றில் குஜராத்தும் கேரளாவும் மோதின. இதில் முதல் நான்கு நாள்கள் முடிவில், விதர்பா vs மும்பை போட்டியில், முதல் இன்னிங்ஸில் விதர்பா 383 ரன்களும், மும்பை 270 ரன்களும் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் விதர்பா 292 ரன்கள் குவித்து மும்பைக்கு 406 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. மறுபக்கம், குஜராத் vs கேரளா ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆக, குஜராத் அணி 400 ரன்களைத் தாண்டி களத்தில் நின்றது.

குஜராத் vs கேரளா

இந்த நிலையில், இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் இன்று கடைசி நாளை எட்டின. ரஞ்சி டிராபி விதிமுறைகளின்படி காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் டிரா ஆகிறதென்றால் முதல் இன்னிங்ஸில் எந்த அணி முன்னிலைப் பெற்றிருந்ததோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், இன்று கேரளாவுக்கெதிரான அரையிறுதியில் குஜராத் அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே, முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் எடுத்துவிட்டதால், குஜராத் தனது வெற்றியை உறுதி செய்ய 458 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

குஜராத்தும் போராடி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 455 ரன்கள் வரை வந்து. இன்னும் 3 ரன்கள் எடுத்துவிட்டால் குஜராத் பைனல் செல்லலாம். அதேசமயம், குஜராத்தை அந்த 3 ரன்களை எடுக்கவிடாமல் இருக்கின்ற ஒரு விக்கெட்டையும் எடுத்துவிட்டால் கேரளா பைனல் செல்லலாம். இப்படியான சூழலில், களத்தில் நின்றிருந்த குஜராத் வீரர் அர்சான் நாக்வஸ்வல்லா, கேரளா வீரர் ஆதித்யா சர்வேட் வீசிய பந்தை ஓங்கி அடிக்க, அது அருகிலேயே பீல்டிங்கில் நின்றிருந்த கேரளா வீரரின் ஹெல்மெட்டில் பட்டு எகிறி கேரளா கேப்டன் சச்சின் பேபி கைகளில் தஞ்சமடைந்தது.

இதனால், முதல் இன்னிங்ஸில் 455 ரன்களில் குஜராத் ஆல் அவுட்டாக, 2 ரன்கள் முன்னிலையுடன் கேரளா இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆட்டநேர முடிவில், கேரளா அணி 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுக்க போட்டி டிரா ஆனது. ரஞ்சி விதிகளின்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றதன் அடிப்படையில் கேரளா, ரஞ்சி டிராபி வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில், விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணியை 325 ரன்களில் ஆல் அவுட்டாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Champions Trophy: பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம் - குழம்பிய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் லாகூரில் நடந்து வரும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் தவறாக ஒலிக்க விடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.Pakistan by mistakenly played Indi... மேலும் பார்க்க

Dhoni: "சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றுவிட்டதால் இனி அதைக் கூற முடியாது..." - தோனி கூறுவதென்ன?

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், பெங்களூரும் மோதுகின்றன. சென்னை அணி தனது முதல் இரு போட்டியில் மும்பை மற்றும் ... மேலும் பார்க்க

IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2)... மேலும் பார்க்க

SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க