Killer: "ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்" - மீண்டும் இணையும் ரஹ்மான் x SJ சூர்யா கூட்டணி
எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் கில்லர் திரைப்படத்தை அவரே இயக்குகிறார். இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கில்லர் படத்தின் பூஜை கடந்த ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது வித்தியாசமான கதைக்களங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்துவந்துள்ளன.

ஆரம்பக்காலத்தில் அஜித், விஜய் போன்ற ஸ்டார்களுக்கு மைல் கல்லாக அமையும் திரைப்படங்களை எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ளார்.
பின்னர் நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை அவரே இயக்கி நடித்தார். அந்த வரிசையில் கில்லர் படமும் இணைகிறது.
2015ம் ஆண்டு வெளியான இசை திரைப்படத்துக்குப் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்தத் திரைப்படமும் சிறந்த கம்பேக்காக அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

கில்லர் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளது கூடுதல் சிறப்பு. ஏற்கெனவே நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர்.
கில்லர் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில், "அது (இசையமைப்பது) வேறுயாருமில்லை, நம்ம இசைப்புயல், இசை லெஜண்ட், இந்தியாவின் பெருமை, ஒன் அண்ட் ஒன்லி ரஹ்மான் சார்தான். வெல்கம் ஆன் போர்ட் சார். உங்களுடன் மீண்டும் இணைவதில் பெருமகிழ்ச்சி" எனப் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
ரஹ்மான் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
Yah it’s none other than OUR ISAI PUYAL , THE MUSICAL LEGEND, INDIAN PRIDE, OUR ONE N ONLY @arrahman sir sirrrr welcome on board sir immensely happy joining you again sir #killer@GokulamGopalan#VCPraveen#BaijuGopalan#Krishnamoorthy… pic.twitter.com/kC9XPIs9mo
— S J Suryah (@iam_SJSuryah) July 7, 2025
கில்லர் படம் பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகளை கமெண்டில் தெரிவியுங்கள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...