செய்திகள் :

KKR vs RCB : ``அந்த 2 பேராலதான் எல்லாம் நடந்துச்சு" - ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி

post image

18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே பெங்களூரு அணி வீழ்த்தியிருக்கிறது. பெங்களூரு சார்பில் கோலியும் சால்ட்டும் மிரட்டலான இன்னிங்ஸை ஆடியிருந்தனர். கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்கியிருக்கிறார் ரஜத் பட்டிதர். போட்டிக்குப் பிறகு ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சியாகவும் பேசியிருந்தார்.

Rajat Patidar

ரஜத் பட்டிதர் பேசியதாவது, "கேப்டனாக முதல் போட்டி என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருந்தது. ஆனால், இது எனக்கு நல்ல நாளாக அமைந்துவிட்டது. இப்படியான வெற்றிகளைப் பெற்றால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். எங்களுக்கு ரஸலின் விக்கெட் தேவைப்பட்டது. அதனால்தான் சுயாஷ் சர்மா ரன்களைக் கொடுத்திருந்தாலும் மீண்டும் அழைத்து வந்தேன். அவர் எங்களின் சிறந்த பௌலர். க்ரூணால் பாண்ட்யாவுக்கும் சுயாஷூக்கும்தான் எல்லா பாராட்டும் செல்லவேண்டும்.

13 ஓவர்களில் கொல்கத்தா 130 ரன்களை எடுத்திருந்தது. அந்த சமயத்தில் விக்கெட் எடுக்கும் உத்வேகத்துடன் வீசியிருந்தனர். கேப்டனாக விராட் கோலி போன்ற வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.' என்றார்.

RR vs KKR Captain's Checkmate : போட்டியை வெல்ல ரஹானே செய்த அந்த ஒரு மூவ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே செய்த ஒரு பு... மேலும் பார்க்க

RR vs KKR: `அது அவ்ளோதான் முடிஞ்சு' தடுமாறிய ராஜஸ்தான்; அலட்டாமல் ஆட்டத்தை முடித்த டி காக்

ஐபிஎல் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் கவுகாத்தியில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றமாக கொல்கத்தாவில் சுனில் ... மேலும் பார்க்க

RR vs KKR: "கடந்த போட்டியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம்" - பவுலிங்கை தேர்வு செய்த ரஹானே

ஐபிஎல் இன்றைய போட்டியில் ராஜஸ்தானும், கொல்கத்தாவும் களமிறங்கின. தங்களின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இரு அணிகளின் கேப்டன்களும் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்யத் தீவிரமாக முன்வந்தனர். டாஸ் ... மேலும் பார்க்க

Sanjiv Goenka: `ஏமாற்றம்தான், பரவாயில்லை' - தோல்விக்குப் பின் வீரர்களிடம் LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா

ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு சஞ்சீவ் கோயங்கா யார் என்று நிச்சயம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். 2016, 2017-ல் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் சஞ்சீவ் கோயங்கா.இவர், 2... மேலும் பார்க்க

LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!

ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ... மேலும் பார்க்க

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இர... மேலும் பார்க்க