Kohli: `ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்; இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்' - கோலி குறித்து அஷ்வின்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி மே 12-ம் தேதி அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோலியின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியிருக்கிறார்.

ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்..!
“இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது விராட் கோலிதான். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஏற்படுத்தியிருக்கும் லெகஸியை யார் நிரப்ப போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கப்போகிறது.
விராட் கோலிக்கு கிரீடம் சூட்டவேண்டுமா? என்ற கேள்வியே எழுப்பக்கூடாது. அவர் அனைத்திற்கும் தகுதியானவர். என்னை பொறுத்தவரை கோலி இன்னும் இரண்டு வருடங்கள் விளையாடியிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...