கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?
Kubera: "தனுஷ் இந்தக் கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டார்!" - நாகர்ஜூனா
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'குபேரா' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தனுஷுடன் நாகர்ஜூனா, ராஷ்மிகா உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோட் செய்ய அடுத்தடுத்து நிகழ்வுகளை 'குபேரா' படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

இன்று மும்பையில் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்று வரும் தனுஷ் படப்பிடிப்பின் இடைவெளியில் வந்து இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
உடனடியாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன்!
நாகர்ஜூனா, "என்னுடைய கரியரின் தொடக்கப் படங்களிலிருந்து பலவற்றையும் இங்கு வடக்கில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
என்னால் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களையும், படங்களையும் செய்துக் கொண்டே இருக்க முடியாது என யோசித்தபோதுதான் இப்படம் என்னிடம் வந்தது.
நான் சேகர் கமுலாவுடன் பணியாற்ற வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளாக நான் காத்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் நடிக்க முடியுமா என சேகர் சார் கேட்டர். நான் உடனடியாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன்.

ஏனென்றால், நான் அவருடைய முந்தையப் படங்களை பார்த்திருக்கிறேன். அவருடைய கதைகள் பொறுப்புணர்வுடன் இருக்கும்.
இப்படத்தின் டப்பிங்கில் ராஷ்மிகாவின் காட்சிகளை பார்த்த அடுத்த கணமே அவரை தொடர்புக் கொண்டு பேசினேன். அவருடைய கதாபாத்திரம் நம்மை சிரிக்க வைக்கும்.
தனுஷ் அற்புதமான நடிகர். இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக அவர் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டார்." என்றார்.